» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தவெகவில் இணையும் விஜயதாரணி: பனையூர் அலுவலகத்தில் குவிந்த முக்கியப் புள்ளிகள்!
சனி 13, ஜூன் 2026 11:21:58 AM (IST)
பாரதிய ஜனதா கட்சியில் தனக்கு உரிய முக்கியத்துவம் மற்றும் பதவிகள் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்த விளவங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி, இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளார்.
அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர் பச்சைமால் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தவெகவில் இணைய பனையூர் அலுவலகம் வந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக வென்றவர் விஜயதாரணி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் தனது பதவிக்காலம் முடியும் முன்பே காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்ததுடன், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து நடைபெற்ற விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் டி.டி.பிரவீன், பாஜக சார்பில் விஜயதாரணி, நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஸ்டெல்லா மற்றும் தவெக சார்பில் மைக்கேல் குமார் ஆகியோர் போட்டியிட்டனர். இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் டி.டி.பிரவீன், தவெக வேட்பாளர் கே.மைக்கேல் குமாரை விட 20,970 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதாரணி திடீரென கட்சி மாறியது உள்ளூர் மக்களிடையே அவரது செல்வாக்கு சரியக் காரணமாக அமைந்தது. தேர்தல் நேரத்தில் பாஜக நிர்வாகிகள் தனக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என ஏற்கனவே விஜயதாரணி அதிருப்தியில் இருந்தார்.
பாரம்பரிய காங்கிரஸ் வாக்குகள் பெரும்பாலும் கை சின்னத்திற்கே சென்ற வேளையில், அதிருப்தியில் இருந்த பாஜக வாக்குகளை தவெக அதிகளவில் கைப்பற்றியது விஜயதாரணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தேர்தல் தோல்விக்கு பிறகும் பாஜகவில் எவ்வித முக்கியப் பொறுப்புகளும் வழங்கப்படாததால் அவர் கடுமையான அதிருப்தியில் இருந்து வந்தார்.
தவெகவில் குவியும் முக்கியப் புள்ளிகள்
இந்நிலையில், பாஜகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய விஜயதாரணி இன்று சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்துள்ளார்.
அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலகங்கா, வனரோஜா, இளவரசன் உள்பட அதிமுக மற்றும் அமமுகவைச் சேர்ந்த முக்கிய மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளும் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் இன்று முறைப்படி கட்சியில் இணையவுள்ளனர்.
அடுத்தடுத்து முக்கியக் கட்சிகளின் தலைவர்கள் தவெகவில் இணையப் பனையூர் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருப்பதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேளாங்கண்ணி சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:36:37 PM (IST)

கன்னியாகுமரியில் மாபெரும் காத்தாடி திருவிழா: சுற்றுலாத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 11:03:05 AM (IST)

பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் - சிபிஎம் அதிரடி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:51:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.1041 கோடியில் நெடுஞ்சாலை பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 12:04:00 PM (IST)

தோவாளையிலிருந்து கேரளாவுக்கு மலர்கள் கொண்டு செல்ல சிறப்பு 'மேமு' ரயில்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:52:59 PM (IST)

தாயைக் கொன்று ஜாமீனில் வந்த வாலிபர் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் குத்திக் கொன்ற கொடூரம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:48:42 AM (IST)


