» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தென்னிந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசு தலையிட கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

செவ்வாய் 10, மார்ச் 2026 3:49:14 PM (IST)



தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் நிலவி வரும் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு உருளை தட்டுப்பாட்டைக் களைய மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு உட்பட தென்னிந்திய மாநிலங்களில் வணிக ரீதியிலான எல்.பி.ஜி. சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமன்றி, பெட்ரோல் உள்ளிட்ட மற்ற எரிபொருள்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற தகவல்கள் பரவி வருவது இந்த அச்சத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் கோவிட்-19 பெருந்தொற்றின் உச்சக்கட்டத்தின் போதும் இதேபோன்ற ஒரு சூழல் நிலவியது. அப்போது மத்திய பாஜக அரசு எடுத்த தாமதமான முடிவுகளாலும், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாததாலும் சாதாரண எளிய மக்களே அதன் பாதிப்புகளைச் சுமக்க வேண்டியிருந்தது. அந்த கசப்பான அனுபவம் தற்போது மீண்டும் நிகழுமோ என்ற பயம் மக்களிடையே எழுந்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடிய இத்தகைய இடையூறுகளைத் தடுக்கத் தேவையான பயனுள்ள நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory