» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரியில் ரூ.91.20 கோடி நலத்திட்ட உதவிகள்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சனி 7, மார்ச் 2026 11:10:09 AM (IST)

கன்னியாகுமரியில் ரூ.91.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, 7,601 பயனாளிகளுக்கு ரூ.72.64 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும், ரூ.18.38 கோடி மதிப்பிலான 131 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிவுற்ற பணிகளையும் திறந்து வைத்தார். விழாவில் ஊரக வளர்ச்சி மற்றும் பேரூராட்சித் துறைகளின் சார்பில் சாலை மேம்பாடு மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட 126 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும், வனத்துறை சார்பில் பழங்குடியின இளைஞர்களுக்காக 'காணி தொல்குடி பயிற்சி மையம்' திறந்து வைக்கப்பட்டது.
பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில உணவு ஆணையத்தலைவர் என்.சுரேஷ்ராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், ஜே.ஜி.பிரின்ஸ், முனைவர் தாரகை கத்பர்ட், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில்கள் சேவையில் மாற்றம் வருமா? பயணிகள் எதிர்பார்ப்பு
சனி 6, ஜூன் 2026 5:52:23 PM (IST)

பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டு மையம் தொடக்கம்: ஆட்சியர் மு.பிரதாப் தகவல்!
சனி 6, ஜூன் 2026 12:30:28 PM (IST)

மாணவர்கள் சுற்றுச்சூழல் தூதுவர்களாகச் செயல்பட வேண்டும்: ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தல்!
வெள்ளி 5, ஜூன் 2026 5:51:36 PM (IST)

ஆசிய டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்று குமரி மாவட்ட மாற்றுத்திறனாளி வீரர் சாதனை!
வியாழன் 4, ஜூன் 2026 12:44:31 PM (IST)

கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு: ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி உத்தரவு!
புதன் 3, ஜூன் 2026 4:48:05 PM (IST)

காப்புக்காட்டில் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு 'இலக்கியச் செம்மல்' விருது!
புதன் 3, ஜூன் 2026 3:46:39 PM (IST)


