» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்ற வேண்டும் : பயணிகள் சங்கம் கோரிக்கை!
வியாழன் 12, பிப்ரவரி 2026 12:14:10 PM (IST)
திருவனந்தபுரம் - தாம்பரம் அம்ரித் பாரத் அதிவிரைவு ரயிலின் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இயக்கப்பட்டு வரும் வண்டி எண் 16122 திருவனந்தபுரம் சென்ட்ரல் – தாம்பரம் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், இரவு 23:45 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. இந்த அகால நேரத்தில் ரயில் நிலையம் வருவதால், பயணிகள் தங்களின் அடுத்தகட்ட பயணத்திற்காக அதிகாலை 4:00 முதல் 5:00 மணி வரை மாநகரப் பேருந்துகளுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.
இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளதாவது: "இந்த ரயிலில் பெரும்பாலும் குளிர்சாதன வசதி இல்லாத பெட்டிகளே அதிகம் என்பதால், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் வரும் குடும்பங்களே அதிகம் பயணிக்கின்றனர். நள்ளிரவில் தாம்பரம் வந்தடைவது அவர்களின் பாதுகாப்பிற்கு அச்சத்தை ஏற்படுத்துவதோடு, மிகுந்த உடல் உபாதைகளையும் தருகிறது."
வண்டி எண் 16122-ஐ திருவனந்தபுரத்திலிருந்து மதியம் சுமார் 15:30 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றி அமைத்தால், அது மறுநாள் அதிகாலை 4:00 மணியளவில் தாம்பரத்தை சென்றடையும். இது பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதேபோல், வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் வண்டி எண் 22658 நாகர்கோவில் – தாம்பரம் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை, சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நேர மாற்றங்கள் அமலுக்கு வந்தால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ஆயிரக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர வர்க்கப் பயணிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்ட சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் ராஜேஷ் குமார் ஆய்வு
சனி 11, ஜூலை 2026 5:03:29 PM (IST)

மது போதையில் சாலையில் கிடந்த இளம்பெண், வாலிபர் : போலீசார் விசாரணை!
சனி 11, ஜூலை 2026 3:35:23 PM (IST)

கிராமப்புற விளையாட்டு வீரர்களை உருவாக்க நடவடிக்கை: மினி மைதானப் பணிகளை ஆட்சியர் ஆய்வு!
சனி 11, ஜூலை 2026 12:44:31 PM (IST)

இரயில் நிலையங்களில் ₹10 கட்டணத்தில் பேட்டரி கார் வசதி: கோட்ட மேலாளருக்கு கோரிக்கை!
புதன் 8, ஜூலை 2026 4:33:40 PM (IST)

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை - விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
செவ்வாய் 7, ஜூலை 2026 4:43:28 PM (IST)

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் ஆய்வு
செவ்வாய் 7, ஜூலை 2026 12:44:21 PM (IST)


