» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பெண் வெளியிட்ட வீடியோ எதிரொலி: சுசீந்திரம் கோவிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை!

ஞாயிறு 25, ஜனவரி 2026 1:50:08 PM (IST)

பெண் வெளியிட்ட வீடியோ வைரலானதால் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்து திருக்கோவில் நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் உள்ளது. இங்கு சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் ஒரே லிங்கத்தில் காட்சியளிப்பதுடன், 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலையும் உள்ளது. இந்நிலையில் கடந்த மார்கழி மாத திருவிழாவின் போது கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் குடும்பத்துடன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 

அப்போது கோவிலில் உள்ள சிற்பங்கள் மற்றும் மூலஸ்தானம், ஆஞ்சநேயர் சன்னதி என முக்கிய சிற்பங்கள் மற்றும் சாமி சிலைகளை வீடியோ எடுத்ததுடன் அதனை ‘ரீலஸ்’சாக வெளியிட்டனர். இது பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ‘ரீல்ஸ்’ வெளியிட்ட பெண் மீது சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் அந்த பெண்ணை, காவல் நிலையம் வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாரும் உள்ளே செல்போன் கொண்டு செல்ல நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதுபற்றி பக்தர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் கோவிலை சுற்றிலும் அறிவிப்பு பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி பக்தர்கள் யாரேனும் செல்போன் கொண்டு சென்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தால் அவர்களிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்படுவதுடன், போலீசில் வழக்கு தொடரப்படும் என்று திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory