» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கோதையாற்றில் முதலை நடமாட்டம்: படகுகளில் சென்று வனத்துறை தேடுதல் வேட்டை!

வெள்ளி 23, ஜனவரி 2026 10:55:13 AM (IST)


கோதையாற்றில் நடமாடும் முதலையை கண்காணித்து பிடிக்கும் வகையில் வனத்துறையினா் ஆற்றுப் பகுதியில் படகுகளில் சென்று தேடுதலில் ஈடுபட்டனர்.

குமரி மாவட்டம், கோதையாற்றின் கடையாலுமூடு முதல் திற்பரப்பு வரையிலான பகுதிகளில் முதலை நடமாட்டம் காணப்படும் நிலையில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களும், அப்பகுதியிலுள்ள வாழைத் தோப்புகள், ரப்பா் தோட்டங்களுக்கு அதிகாலையில் வேலைக்குச் செல்லும் தொழிலாளா்களும் அச்சமடைந்துள்ளனா்.

மேலும் திற்பரப்பு தடுப்பணையில் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று ஆற்றுப் பகுதியில் வனத்துறையினா் இரு குழுவாக படகுகளில் சென்று முதலையை தேடினா். முதலையை விரைந்து பிடித்து வெளியேற்ற வனத்துறை, மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டுமென்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory