» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பராமரிப்பு பணி: வைஷ்ணவ தேவி கத்ரா-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்!

வியாழன் 22, ஜனவரி 2026 12:41:55 PM (IST)

பராமரிப்பு பணி காரணமாக வைஷ்ணவ தேவி கத்ரா-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்ரீ வைஷ்ணவ தேவி கத்ராவில் இருந்து கன்னியாகுமரி வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-16318) அடுத்த மாதம் 23-ந் தேதி மற்றும் மார்ச் 2-ந் தேதியில் சகுர்பஸ்தி, பட்டேல் நகர், ஓக்லா வழியாக இயக்கப்படும். மேலும், இந்த ரயில் புதுடெல்லி, ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் நிற்காது.

அதே போல, ஸ்ரீ வைஷ்ணவ தேவி கத்ராவில் இருந்து சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (16032) வருகிற 24 மற்றும் அடுத்த மாதம் 28-ந் தேதியில் சகுர்பஸ்தி, பட்டேல் நகர், ஓக்லா வழியாக இயக்கப்படும். மேலும், இந்த ரயிலும் புதுடெல்லி, ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் நிற்காது.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory