» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பொங்கல் விடுமுறை: விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 4 நாட்களில் 72,464 பேர் பார்வை...!

திங்கள் 19, ஜனவரி 2026 9:05:50 PM (IST)



பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு சர்வதேச சுற்றுலா தலமான விவேகானந்தர் நினைவு மண்டபத்தை கடந்த 4 நாட்களில் 72,464 பேர் பார்வையிட்டுள்ளனர்.

ஜனவரி 14-ம் தேதி 9,593 பேரும், பொங்கல் பண்டிகையான 15ஆம் தேதி 16 ஆயிரத்து 564 பேரும், மாட்டுப்பொங்கல் தினமான 16ஆம் தேதி 14,737 பேரும், காணும் பொங்கல் தினமான 17ஆம் தேதி 15 ஆயிரத்து 715 பேரும் மற்றும் நேற்று ஞாயிற்றுக்கிழமை 15,855 பேரும் என மொத்தம் 72,464 பேர் படகில் சென்று பயணம் செய்து 133 அடி உயரமுள்ள அய்யன் திருவள்ளூர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு பாறை இவற்றை இணைக்கக்கூடிய கண்ணாடி கூண்டு பாலம் ஆகியவற்றை பார்வையிட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory