» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பேரணி : விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

திங்கள் 19, ஜனவரி 2026 5:29:47 PM (IST)


குமரியில் இருந்து காஷ்மீர் வரை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் பேரணி கன்னியாகுமரியில் பிப்ரவரி 7ம் தேதி துவங்கும் என்று விவசாயிகள் சங்க மூத்த தலைவர் பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் அறிவித்தனர். 

நாகர்கோவிலில் நடைபெற்ற விவசாயிகள்  ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கூறுகையில், "திமுக அரசு கொடுத்த வாக்குறுதியில் விவசாயிகள் நம்பிக்கை இழந்துள்ளனர்,கனிம வளங்கள் கொள்ளை தமிழகத்தில் நடந்து வருகிறது இது குறித்து அரசு, முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்-

மேலும் விவசாயிகள் விளைச்சல் செய்கின்ற பயிர்களுக்கு ஆதார விலை நிர்ணயச் சட்டம் கொண்டு வர வேண்டும்,விவசாய கடன்கள் ரத்து செய்ய வேண்டும்,இலவச மின்சாரத்தை ரத்து செய்கின்ற வகையில் கொண்டு வரப்பட்டுள்ள ஒழுங்குமுறை ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை செல்லும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பேரணி கன்னியாகுமரியில் புறப்படும் எனவும் தெரிவித்தனர். குமரி மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory