» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

விபத்தில்லா குமரி: லாரி ஓட்டுநர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

சனி 6, டிசம்பர் 2025 4:59:02 PM (IST)


கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவுப்படி, காணிமடம் பகுதியில் உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் லாரி ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு வழங்கினார்.

பள்ளி–கல்லூரி பகுதிகளில் மெதுவாக ஓட்டுதல், செல்போன் பயன்படுத்தாமல் இயக்குதல், அதிகபாரம் ஏற்றாதிருத்தல், அனுமதி இல்லாமல் வாகன மாற்றம் செய்யக்கூடாது என முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டை விட கன்னியாகுமரியில் வாகன விபத்து உயிரிழப்பு 50% குறைந்துள்ளது என்ற சாதனையை போலீசார் தெரிவித்தனர். 70-க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி, ‘விபத்தில்லா குமரி’ முயற்சியின் ஒரு பகுதியாக தொடர்ந்து நடைபெறும் என்று போலீசார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory