» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

லஞ்சப் புகாரில் சிக்கிய காவல் ஆய்வாளர் அதிரடி இடமாற்றம்: நெல்லை சரக டி.ஐ.ஜி. உத்தரவு!

சனி 22, நவம்பர் 2025 11:27:57 AM (IST)

குமரி மாவட்டத்தில் லஞ்சப் புகாரில் சிக்கிய காவல் ஆய்வாளரை தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணி இடமாற்றம் செய்து நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சைபர் க்ரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சொர்ண ராணி. இவர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் போது லஞ்சம் பெற்ற வீடியோ  மற்றும் புகார் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் அளித்து  லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யும் நிலையில் உள்ளனர்.   

இந்த நிலையில் நாகர்கோவில் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளரான ஸ்வர்ண ராணி லஞ்சம் ஊழலில் ஈடுபட்டதாலும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாலும் இவரை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் சொர்ண ராணியை தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணி இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory