» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நீரோடி கடலில் மாயமானவர் உடல் கேரளாவில் மீட்பு

வெள்ளி 21, நவம்பர் 2025 8:21:30 AM (IST)

குமரி மாவட்டத்தில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மாயமான மீனவர் உடல் கேரளா கடலில் மீட்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் மேலமுட்டம் பகுதியைச் சேர்ந்த சகாய அருள் (32) மற்றும் சேவியர் ஆண்டனி சுபன் (31) ஆகியோர் கடந்த 17ஆம் தேதி பைபர் படகில் நீரோடி கடல் பகுதிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது கடல் அலை காரணமாக படகு அலை தடுப்பு சுவரில் மோதி சேவியர் ஆண்டனி சுபன் கடலில் மாயமானார். 

குளச்சல் கடலோர காவல் நிலைய போலீசார் அவரைத் தேடி வந்த நிலையில், நேற்று மாலையில் கேரளா, விழிஞ்சம் கடற்கரை பகுதியில் அவரது உடல் கரை ஒதுங்கியது. போலீசார் உடலை மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் ஒப்படைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory