» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் குண்டும், குழியுமான சாலைகள் : பள்ளி மாணவ மாணவிகள் வாகன ஓட்டிகள் அவதி

வியாழன் 20, நவம்பர் 2025 5:41:18 PM (IST)



நாகர்கோவிலில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் பள்ளி மாணவ மாணவிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், குமரி மாவட்டத்தின் தலைநகராக நாகர்கோவில் திகழ்கிறது. கன்னியாகுமரிக்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் நாகர்கோவில் வழியாகவே செல்கிறார்கள். அதாவது கன்னியாகுமரி சாலை, செட்டிகுளம் ,மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலை, கோட்டார் வைத்தியநாதபுரம் சவேரியார் கோவில் சந்திப்பு, பீச் ரோடு ,பாலமோர் சாலை, கேப் சாலை மற்றும் கணேசபுரம், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை,என நாகர்கோவில் அனைத்து சாலைகளுமே குண்டும்-குழியுமாக இருக்கிறது 

அதிலும் குறிப்பாக கோட்டார் கன்னியாகுமரி சாலை இருந்து செட்டிகுளம் வரை செல்லும் சாலை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. அங்கு ஜல்லி, தார்கலவை அனைத்தும் பெயர்ந்து ரோடு இருப்பதே தெரியாத அளவுக்கு உள்ளது. மேலும் இது சாலையா? அல்லது மரண குழிகளா? பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory