» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நெல்லை, தூத்துக்குடி, குமரியில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
வியாழன் 20, நவம்பர் 2025 5:10:10 PM (IST)
நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை (நவ.21) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, வருகின்ற சனிக்கிழமை (நவ.22) வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, 24-ம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு - வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும்.
இதன் காரணமாக நாளை (நவ.21) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 22 முதல் 26-ம் தேதி வரை கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நாளை (நவ.21) தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், 22, 23 தேதிகளில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
24-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில்லும், 25-ம் தேதி புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலுமும், 26-ம் தேதி திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (நவ.21) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நவ.24-ம் தேதி சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் ஆயிக்குடியில் 15 செமீ, தென்காசியில் 13 செமீ, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், கன்னடயன் அணைக்கட்டில் தலா 11 செமீ, ஊத்து, நாலுமுக்கில் தலா 9 செமீ, காக்காச்சி, தென்காசி மாவட்டம் கருப்பாநதி அணையில் தலா 8 செமீ, செங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் குண்டும், குழியுமான சாலைகள் : பள்ளி மாணவ மாணவிகள் வாகன ஓட்டிகள் அவதி
வியாழன் 20, நவம்பர் 2025 5:41:18 PM (IST)

டாஸ்மாக் கடையை அகற்றும் வரை போராட்டம் தொடரும்: தளவாய் சுந்தரம் ஆவேசப் பேச்சு!
வியாழன் 20, நவம்பர் 2025 5:32:57 PM (IST)

அசுத்தமான ஆறுகள், குளங்களில் நீராடுவதை தவிர்க்க வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்!
புதன் 19, நவம்பர் 2025 5:44:54 PM (IST)

தலைமுடி உதிர்வால் மன வேதனை: இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை!
புதன் 19, நவம்பர் 2025 5:36:37 PM (IST)

பெண்ணிடம் ஆபாச செய்கை காட்டியவர் கைது!
புதன் 19, நவம்பர் 2025 8:36:38 AM (IST)

குமரி மாவட்டத்தில் பொய்கை அணை திறப்பு: 450.23 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்
செவ்வாய் 18, நவம்பர் 2025 8:58:05 PM (IST)


.gif)