» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அரையாண்டு விடுமுறை: தென்மாவட்ட ரயில்களில் டிக்கெட் முன்பதிவு..!
சனி 25, அக்டோபர் 2025 8:42:07 AM (IST)
அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு தென்மாவட்ட ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் கன்னியாகுமரி, அனந்தபுரி போன்ற ரயில்களில் டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்தன.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படும். அதன்படி, 7 முதல் 10 நாட்கள் வரை தொடர் விடுமுறை கிடைக்கும். இதனால் சென்னையில் வசிப்பவர்கள், தொழில் செய்பவர்கள் என பலரும் தங்களுடைய குடும்பங்களுடன் சொந்த ஊர் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல திட்டமிடுவார்கள். இதுபோன்ற விடுமுறை தினங்களை கொண்டாட சொந்த ஊர் செல்வோர் முதலாவதாக ரயிலை தேர்வு செய்து பயணம் செய்வது வழக்கமான ஒன்றாக உள்ளது.
அதன்படி, அரையாண்டு விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் வசதிக்காக (டிசம்பர் 22-ந்தேதி) ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தொடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வழியாகவும், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலமாகவும் முன்பதிவு நடைபெற்றது.
முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் தென்மாவட்டம் செல்லும் கன்னியாகுமரி, அனந்தபுரி போன்ற ரயில்களில் டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்தன. நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆர்.ஏ.சி.க்கு வந்துவிட்டது. பொதிகை, முத்துநகர், கொல்லம், குருவாயூர், செந்தூர் போன்ற தென்மாவட்ட ரயில்களில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதேபோல டிசம்பர் 24-ந்தேதி சொந்த ஊர் செல்பவர்கள் இன்றும் (சனிக்கிழமை), டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று சொந்த ஊர் செல்பவர்கள் நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) முன்பதிவு செய்யலாம். முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இதுவரை 1,06,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு உங்க கனவ சொல்லுங்க அட்டை : ஆட்சியர்..!
செவ்வாய் 27, ஜனவரி 2026 5:08:31 PM (IST)

கன்னியாகுமரியில் 77-வது குடியரசு தினவிழா: ஆட்சியர் அழகுமீனா தேசியக்கொடி ஏற்றினார்!
திங்கள் 26, ஜனவரி 2026 12:43:43 PM (IST)

பெண் வெளியிட்ட வீடியோ எதிரொலி: சுசீந்திரம் கோவிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை!
ஞாயிறு 25, ஜனவரி 2026 1:50:08 PM (IST)

நாகராஜா கோவிலில் தைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
சனி 24, ஜனவரி 2026 12:11:42 PM (IST)

இரணியல், குழித்துறையில் புதிய நிறுத்தம் அனுமதி இல்லை : பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 23, ஜனவரி 2026 12:00:43 PM (IST)

கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர்
வெள்ளி 23, ஜனவரி 2026 11:15:57 AM (IST)

