» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இந்திய விண்வெளி மையம் 2035-ம் ஆண்டு நிறுவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி

திங்கள் 20, அக்டோபர் 2025 9:46:32 AM (IST)

இந்திய விண்வெளி மையம் 2035-ம் ஆண்டு நிறுவப்படும் என்று இவ்வாறு இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.

குமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி தலைமை பதிக்கு நேற்று காலையில் இஸ்ரோ தலைவர் நாராயணன் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது: இந்தியாவிற்காக விண்வெளி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு அரசு முதற்கட்ட அனுமதி வழங்கி உள்ளது. 

52 டன் எடை கொண்ட இந்திய விண்வெளி மையம் 5 ராக்கெட் மூலம் விண்ணுக்கு கொண்டு சென்று நிறுவப்பட உள்ளது. இதற்கான முதல் ராக்கெட் வருகிற 2028-ம் ஆண்டு விண்ணில் ஏவப்படும். பின்னர் 4 ராக்கெட் மூலம் விண்வெளி மையம் எடுத்து செல்லப்பட்டு 2035-ம் ஆண்டு நிறுவப்படும். இதற்கான சோதனை இந்த ஆண்டு வெற்றிகரமாக செய்யப்பட்டு உள்ளது.

வருகிற டிசம்பர் மாதம் மார்க் 3 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் 6 ஆயிரம் கிலோ எடை கொண்ட தொலை தொடர்பு செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்பப்படும். மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக 3 ஆளில்லா ராக்கெட் அனுப்பி வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் இந்த ஆண்டு இறுதியில் முதல் ராக்கெட் அனுப்பி சோதனை செய்யப்படும். 2027-ம் ஆண்டு தொடக்கத்தில் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory