» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தீபாவளி விற்பனை களை கட்டியது: ரயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:41:28 AM (IST)
தீபாவளி பண்டிகையையொட்டி கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. புத்தாடை, பட்டாசு விற்பனை மும்முரமாக நடந்தது.
தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்திலும் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இதனால் வீட்டு உபயோக பொருட்கள், புத்தாடைகள், பூஜை பொருட்கள், இனிப்புகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் குமரியில் தீபாவளி வியாபாரம் களை கட்டியது.
அதன்படி நாகர்கோவிலில் உள்ள கடை வீதிகளில் நேற்று காலை முதலே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. செம்மாங்குடி ரோட்டில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பண்டிகைக்காக சிறுவர்கள், இளைஞர்கள், இளம்பெண்களை கவரும் வகையில் புத்தம் புது மாடல்களில் ஆடைகள் கடைகளுக்கு வந்திருந்தன. அதை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து வாங்கிச் சென்றார்கள்.
மேலும் வடசேரி, ஆட்சியர் அலுவலகம் பகுதியில் உள்ள துணிக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மக்கள் கடைவீதியை நோக்கி வாகனங்களில் ஒருசேர படையெடுத்ததால் நாகர்கோவில் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளியை குதூகலப்படுத்தும் வகையில் புத்தம் புது மாடல்களில் பட்டாசுகளும் விற்பனைக்கு வந்திருந்தன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை தேர்வு செய்து வாங்கிச் சென்றனர்.அதே சமயத்தில் தீபாவளியை கொண்டாட வௌியூரில் வசிக்கும் மக்களும் குமரிக்கு ரயில்கள், பஸ்கள் மூலம் திரும்பினர். நாகர்கோவிலில் வேலை பார்த்தவர்களும் அவரவர் ஊருக்கு கிளம்பினர். இதனால் பஸ்நிலையம், ரயில் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பயணிகள் வசதிக்காக நேற்றுமுன்தினம் முதல் குமரியில் இருந்து வெளியூர்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 123 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகராஜா கோவிலில் தைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
சனி 24, ஜனவரி 2026 12:11:42 PM (IST)

இரணியல், குழித்துறையில் புதிய நிறுத்தம் அனுமதி இல்லை : பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 23, ஜனவரி 2026 12:00:43 PM (IST)

கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர்
வெள்ளி 23, ஜனவரி 2026 11:15:57 AM (IST)

கோதையாற்றில் முதலை நடமாட்டம்: படகுகளில் சென்று வனத்துறை தேடுதல் வேட்டை!
வெள்ளி 23, ஜனவரி 2026 10:55:13 AM (IST)

இளம் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறி மோசடி : பெண் கைது...!
வெள்ளி 23, ஜனவரி 2026 10:50:38 AM (IST)

திமுக கூட்டணியை நேரடியாக வெல்ல முடியாது என்பதால் மிரட்டுகிறாா்கள் : கி.வீரமணி பேட்டி
வெள்ளி 23, ஜனவரி 2026 10:45:12 AM (IST)

