» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி குகநாதீஸ்வரர் கோவிலில் சிவலிங்க வடிவத்தில் 1008 சங்காபிஷேகம்!
திங்கள் 13, அக்டோபர் 2025 11:55:21 AM (IST)

கன்னியாகுமரி பழமையான ஸ்ரீகுகநாதீஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி இன்று 1008 சங்காபிஷேகம் நடந்தது.
கன்னியாகுமரி ரயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீகுகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பே மாமன்னன் ராஜராஜ சோழன் இந்த கோவிலை கட்டியதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.
இங்கு குகன் என்ற முருகப்பெருமான், சிவபெருமானை வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வரக்காரணமாயிற்று. குமரி மாவட்டத்திலேயே மிக உயரமான ஐந்தரை அடி உயர சிவலிங்கம் இந்த கோவிலில் தான் அமைந்து உள்ளது.
அப்படிப்பட்ட புகழ் பெற்ற இந்த குகநாதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி இன்று 1008 சங்காபிஷேகம் நடந்தது.
இதையொட்டி காலையில் கணபதி ஹோமமும் தீபாராதனையும் நடந்தது. பின்னர் 1008 வலம்புரி சங்குகளை சிவலிங்க வடிவத்தில் அடுக்கி வடிவமைத்து வைத்து அதில் புனித நீர் நிரப்பி சங்குபூஜை நடத்தப்பட்டது. அதன்பிறகு அந்த சங்குகளில் உள்ள புனித நீரால் குகநாதீஸ்வர பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது: 2 வாகனங்கள் பறிமுதல்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 4:51:47 PM (IST)

நாகர்கோவிலில் பராமரிப்பு பணி: 5 விரைவு ரயில்கள் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்!
செவ்வாய் 20, ஜனவரி 2026 4:20:22 PM (IST)

பொங்கல் விடுமுறை: விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 4 நாட்களில் 72,464 பேர் பார்வை...!
திங்கள் 19, ஜனவரி 2026 9:05:50 PM (IST)

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பேரணி : விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
திங்கள் 19, ஜனவரி 2026 5:29:47 PM (IST)

அகஸ்தீஸ்வரம் அருகே மின்சார ரயில் இஞ்சின் பராமரிப்பு தொழிற்கூடம்: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா?
திங்கள் 19, ஜனவரி 2026 5:04:51 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 285 கோரிக்கை மனுக்கள்
திங்கள் 19, ஜனவரி 2026 4:39:45 PM (IST)

