» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருடச் சென்ற வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் - வாலிபர் கைது!
செவ்வாய் 7, அக்டோபர் 2025 12:48:02 PM (IST)
குளச்சல் அருகே கொள்ளையடிக்க சென்ற போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் சம்பவத்தன்று இரவு வேலைக்கு சென்றிருந்தார். இதனால் வீட்டில் அவரது 36 வயதுடைய மனைவி மட்டும் தனியாக தூங்கி கொண்டிருந்தார். அப்போது அதிகாலையில் ஒரு வாலிபர் வீட்டின் மேல்மாடி கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தார். அவர் வீட்டின் அறையில் உள்ள பீரோவை திறந்து பணம், நகை ஏதாவது இருக்கிறதா? என பார்த்தார்.
ஆனால், அதில் விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தார். தொடர்ந்து அந்த வாலிபர் மற்றொரு அறையில் நுழைந்த போது அங்கு மீனவரின் மனைவி கட்டிலில் தூங்கி கொண்டிருந்தார். இதை பார்த்த வாலிபர் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அந்த பெண் திடீரென கண்விழித்தார்.
அப்போது அந்த வாலிபர், பெண்ணின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றார். உடனே பெண் ‘திருடன்... திருடன்...’ என கத்தி கூச்சலிட்டார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதற்கிடையே பெண்ணின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் தப்பியோடிய வாலிபரை துரத்தி சென்று பிடிக்க முயன்றனர். ஆனால், அவர் வேகமாக ஓடி தப்பி சென்றார்.
இதுகுறித்து பெண் குளச்சல் காவல் நிலையத்துக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். உடனே, போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த பகுதியில் தேடினர். அப்போது குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அந்த வாலிபரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கீழமுட்டம் பகுதியை சேர்ந்த சகாயஜோஸ்(24) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சகாயஜோஸை கைது செய்தனர். தொடர்ந்து அவரை இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சகாயஜோஸ் மீது மணவாளக்குறிச்சி, வெள்ளிச்சந்தை காவல் நிலையங்களில் 8 திருட்டு வழக்குகளும், குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் 2 போக்சோ வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் 9277 மனுக்களுக்கு தீர்வு: ஆட்சியர் தகவல்
வியாழன் 9, அக்டோபர் 2025 5:18:19 PM (IST)

குமரியில் 102 ஆண்டுகளுக்குப் பின் பூத்து குலுங்கும் பனை மரம் : பொதுமக்கள் வியப்பு
வியாழன் 9, அக்டோபர் 2025 10:05:24 AM (IST)

ஒரே நாளில் 8 சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது : குமரி மாவட்ட போலீஸ் அதிரடி!
புதன் 8, அக்டோபர் 2025 11:22:05 AM (IST)

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: இலவசமாக மனுக்கள் எழுதிகொடுக்க ஏற்பாடு!
திங்கள் 6, அக்டோபர் 2025 3:32:00 PM (IST)

மின்கம்பத்தில் பைக் மோதிய விபத்தில் பார்மசிஸ்ட் உயிரிழப்பு!
திங்கள் 6, அக்டோபர் 2025 12:36:30 PM (IST)

திற்பரப்பு அருவியில் குளித்தபோது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது
ஞாயிறு 5, அக்டோபர் 2025 10:02:28 AM (IST)
