» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மணவாளக்குறிச்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: ஆட்சியர் துவக்கி வைத்தார்!

சனி 4, அக்டோபர் 2025 3:53:07 PM (IST)




மணவாளக்குறிச்சியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்து, பார்வையிட்டார்.

கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மணவாளக்குறிச்சி, வெள்ளிமலை, மண்டைக்காடு, கல்லுக்கூட்டம், ரீத்தாபுரம், திங்கள்நகர், நெய்யூர், வில்லுகுறி ஆகிய பேரூராட்சிகளுக்குட்பட்ட பொதுமக்களுக்கும், முட்டம், வெள்ளிச்சந்தை, சைமன்காலனி, ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்களுக்கும், குளச்சல் நகராட்சிக்குட்பட்ட பொதுமக்களுக்கும் நலம் காக்கும் ஸ்டாலின் – ஒன்பதாம் கட்ட முகாம் மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளி வாளகத்தில் இன்று (04.10.2025) நடைபெற்றது.

இம்முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, குத்துவிளக்குகேற்றி துவக்கி வைத்து, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் என்ற ஆரோக்கியமான திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்கள். இத்திட்டம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இம்முகாம்களில் அடிப்படை மற்றும் உயர்நிலை மருத்துவப் பரிசோதனைகளுடன் முழுமையான உடல் ஆரோக்கியப் பரிசோதனைகளும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மின் இதய வரைபடம், எக்கோ, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், எக்ஸ்-ரே, காசநோய் மற்றும் தொழுநோய் கண்டறியும் பரிசோதனைகளும், ஆரம்பகட்ட புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும், பொது மருத்துவம் கண்கள் காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், ஆயுஸ் மருத்துவம், மனநல மருத்துவம், மகப்பேறு மற்றும் மகளிர் இருதய நிபுணர், எலும்பு முறிவு, நாம்பியல் சிகிச்சை, முதல்வர் காப்பீட்டுத்திட்டம் மற்றும் இதயவியல் உள்ளிட்ட 17 துறைகளைச் சார்ந்த நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. 

மேலும் நமது மாவட்டத்தில் இதுவரை 8 முகாம்கள் நடைபெற்றுள்ளன. அதில் 4367 ஆண்களும், 10419 பெண்களும் என மொத்தம் 14,786 பயனாளிகள் பயன்பெற்றுள்ளார்கள். இன்று ஒன்பதாவது முகாம் மணவாளக்குறிச்சி, வெள்ளிமலை, மண்டைக்காடு, கல்லுக்கூட்டம், ரீத்தாபுரம், திங்கள்நகர், நெய்யூர், வில்லுகுறி ஆகிய பேரூராட்சிகளுக்குட்பட்ட பொதுமக்களுக்கும், முட்டம், வெள்ளிச்சந்தை, சைமன் காலனி, ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்களுக்கும், குளச்சல் நகராட்சிக்குட்பட்ட பொதுமக்களுக்கும் மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளி வாளகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுவரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து மாலை 4 மணி வரை நடைபெறும் மருத்துவ முகாமில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், மருத்துவர்கள் பரிசோதனை செய்து தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கி, மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிறப்பு மருத்துவர்களை கொண்டு பரிசோதனை செய்து ECHO போன்ற உயர் பரிசோதனைகளும் செய்து வருகின்றார்கள். உயர் சிகிச்சை தேவைப்படுவோருக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் பரிசோனை மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு முகாம்களில் பரிசோதிக்கப்படும் ஆய்வக சோதனைகளின் முடிவுகள் அன்றைய தினமே வழங்கப்படுகிறது.

தொடர்ந்து டோக்கன் வழங்கும் பகுதிகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த அதிக கவுன்ட்டர்கள் ஏற்படுத்த வேண்டும் எனவும், முகாமிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு தேவையான இருக்கை வசதிகள் செய்து கொடுக்க வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் முகாம்கள் நடப்பது குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் விளம்பரங்கள் செய்ய துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

முகாம்களில் பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் போதுமான அளவுக்கு ஏற்படுத்த வேண்டும். மேலும் மருத்துவப் பயனாளிகளின் வருகை பதிவு, மேற்கொள்ளும் சிகிச்சைகள் என அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்படுகிறதா எனவும், ஒவ்வொரு மருத்துவப் பயனாளிக்கும் அடுத்தடுத்து வழங்கப்படும் சிகிச்சைகள் பதிவு செய்யப்படுகிறதா எனவும், அங்கு பணியாற்றும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

மருத்துவ முகாமில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் என்.சுரேஷ் ராஜன், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் லியோ டேவி, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் சகாய ஸ்டீபன் ராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் அரவிந்த் ஜோதி, துணை இயக்குநர்கள் ரவிக்குமார் (குடும்பநலம்), கிரிஜா (தொழுநோய்), முகாம் ஒருங்கிணைப்பாளர் பிவீனா, முகாம் கண்காணிப்பாளர் சேனம்விளை அரசு மருத்துவனை மருத்துவ அலுவலர் வெங்கடேஸ்வரன், வட்டார மருத்துவ அலுவலர் பிரதீப், பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளி தாளாளர் முனைவர் நஸ்ரேத் சார்லஸ், துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory