» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அதிக மதிப்பெண் பெறுவதை இலட்சியமாகக் கொண்டு படிக்க வேண்டும்: ஆட்சியர் அறிவுரை
திங்கள் 21, ஜூலை 2025 5:03:33 PM (IST)

தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளி, மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு மேற்கொண்டு, மாணவ மாணவியர்களை நேரில் சந்தித்து, கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேசுகையில்- தக்கலை கல்வி மாவட்டத்திற்குட்பட்ட தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் தேர்ச்சியை 100 சதவீதமாக கொண்டு வரும் நோக்கில் மாணவர்களுடன் கலந்துரையாடப்பட்டது. பதினொன்றாம் வகுப்பில் பயிலும் மாணவர்கள், 11ஆம் வகுப்பு தேர்வில் முழுமையாக தேர்ச்சி பெற்றால் தான் 12 ஆம் வகுப்பில் எந்த இடையூறும் இன்றி பன்னிரண்டாம் வகுப்பு பாடத்தினை முழு கவனத்துடன் படிக்க இயலும்.
எனவே 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விளையாட்டாய் பதினொன்றாம் வகுப்பை எதிர்கொள்ளாமல், கருத்துடன் படித்து நல்ல தேர்ச்சியினை பெற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, மாணவர்கள் தாங்கள் விரும்புகிற உயர்க ல்வியினை கல்லூரிகளில் பெற இயலும். கல்லூரிகளில் சேர்ந்து உயர்கல்வியினை பெற வேண்டும் என்கிற உயரிய குறிக்கோளோடு, அதிக மதிப்பெண் பெறுவதை இலட்சியமாகக் கொண்டு 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பாடங்களை படித்திடல் வேண்டும்.
சென்ற வருடத்தில் மாணவர்கள் ஒழுங்காக பள்ளிக்கு வராததினால் தான், தோல்வியை தழுவியுள்ளனர். எனவே அனைத்து மாணவர்களும் தவறாமல் ஒழுங்காக தினமும் பள்ளிக்கு வருகை புரிந்திடல் இன்றியமையாத ஒன்றாகும். தினமும் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை அன்றைய தினமே படித்திடல் வேண்டும். இது, தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்றுத்தரும்.
தற்போது, அனைத்து அரசு பள்ளிகளிலும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் சார்ந்த விழிப்புணர்வு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களாகிய தாங்கள், உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியரின் உதவியுடன் கிடைக்கப்பெறும் இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி, பன்னிரெண்டாம் வகுப்புக்கு பின் சேர வேண்டிய சிறந்த உயர் கல்வியினை திட்டமிட்டு, அதற்கான பயிற்சிகளிலும் தொடர்ந்து ஈடுப்படுதல் வேண்டும்.
மேலும் சென்ற வருடம் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியரின் வழிகாட்டுதலோடு, கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த அரசு பள்ளி மாணவர்கள் சிலர், தேசிய அளவிலான முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயிலும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இந்த கல்வி ஆண்டிலும், பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் அதிகமான அரசு பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான போட்டித்தேர்வுகளில் கலந்துகொண்டு, தேசிய முன்னணி கல்வி நிறுவனங்களில் பயிலும் வாய்ப்பை பெற வேண்டும். அதற்கான முயற்சிகளை தங்களது பள்ளி பாடங்களின் ஊடே தொடர்ந்திடல் வேண்டும்.
மாணவர்கள், தேர்ச்சி ஒன்றை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல்படாமல், அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கில், தேவையற்ற விளையாட்டுகளை புறந்தள்ளி, கடின உழைப்புடன், படித்தால் அதிக மதிப்பெண்களை பெற இயலும். அதன் விளைவாக சிறந்த கல்லூரிகளில் உயர் கல்வியை தொடரும் நிலையை அடைய முடியும். கல்லூரி படிப்பு என்பது ஒவ்வொருவருடைய எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் ஒன்றாகும். எனவே அத்தகைய கல்லூரி படிப்புக்கு தயாராகும் விதத்தில் அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண்ணுடன் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா பேசினார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் வில்லுக்குறி அரசு தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, முதலமைச்சரின் காலை உணவு திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், மாணவர்களின் கற்றல் திறன் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு, மணவர்களுடன் கலந்துரையாடினார். ஆய்வில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தண்டவாள பராமரிப்பு பணி: தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்
சனி 23, ஆகஸ்ட் 2025 8:30:27 AM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.8.03 கோடி மதிப்பில் புதிய பாலம், கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:19:32 PM (IST)

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : மீனவர்கள் வேலை நிறுத்தம் - ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:49:08 PM (IST)

இளைஞர்களுக்கு ஃபோர்க்லிஃப்ட் ஆப்பரேட்டர் பயிற்சி : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:03:47 PM (IST)

நாகர்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 11:36:02 AM (IST)

பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் பிறந்த நாள் விழா : ஆட்சியர், மேயர் அரசியல் கட்சியினர் மரியாதை!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 3:13:54 PM (IST)

அது அந்தக்காலம்Jul 21, 2025 - 06:52:47 PM | Posted IP 172.7*****