» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட அனைத்து அவசர உதவிகளுக்கு ஒரே எண்!!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:47:49 PM (IST)

தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுவதற்காக அனைத்து அவசர உதவிகளுக்கு (மருத்துவம், காவல், தீயணைப்பு துறை) 108 என்ற ஒரே எண்ணை அழைத்து உதவி பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சீரிய வழிகாட்டுதலின்படி EMRI GHS நிறுவனம் 108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறது. 108 என்ற எண் தற்பொழுது ஒருங்கிணைக்கப்பட்டு காவல்துறை, மருத்துவம், மற்றும் தீயணைப்பு துறை சம்பந்தமான எந்த ஒரு அவசர தேவைக்கும் மக்கள் மேற்கண்ட ஒரே எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
108 மாநில தலைமை அலுவலகத்தில் மேற்கண்ட பேரிடர் மேலாண்மை துறை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இரவு பகல் எனத்தொடர்ந்து பணியில் இருப்பார்கள். மக்களின் அவசர தேவையை உணர்ந்து இவர்கள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அருகாமையில் உள்ள தங்கள் துறை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து பொது மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனுக்குடன் சென்று சேர ஒருங்கிணைப்பார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் பதினெட்டு(18) 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. பொதுவாக 108 ஆம்புலன்ஸ் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து மக்களுக்கு சேவை வழங்கும். ஆனால் தற்பொழுது வரவிருக்கும் தீபாவளியை முன்னிட்டு மக்கள் அதிக அளவில் கூடும் இடங்கள் மற்றும் அதிக விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ள இடங்கள் கண்டறிந்து அங்கு நிறுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் நிறுத்துவதால் பொதுமக்கள் அழைத்தவுடன் விரைவில் சென்று அவர்களுக்கு உதவி செய்ய இயலும். இவ்வாறு செய்வதை ஹாட்ஸ்பாட் மறுசீரமைப்பு என்று கூறுவார்கள்.
கடந்த கால அனுபவத்தின் படி அதிக அழைப்புகள் வரும் இடங்களை கண்டறிந்து மேற்கண்ட இடங்களுக்கு ஆம்புலன்ஸ்கள் மாற்றி நிறுத்தப்பட உள்ளன. கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வந்த அழைப்புகளின் எண்ணிக்கை அதிக அளவில் தீக்காயம் உள்ளிட்ட அவசர தேவை ஆகும். இதை கருத்தில் கொண்டு இந்த வருடம் முதல் தீக்காயம் ஏற்பட்ட வரை காப்பாற்ற தேவையானவை முதலுதவி மருந்துகள் அடங்கிய பிரத்தியோக மருந்துகள் மற்றும் உபகரணங்கள் அனைத்து 108 ஆம்புலன்ஸ்க்கு தரப்பட்டுள்ளது.
அது எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்த முறையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸில் உள்ள பயிற்சி பெற்ற மருத்துவ பணியாளர்கள் சம்பந்தப்பட்ட இடத்திலேயே தீக்காயம் ஏற்பட்டவருக்கு முதலுதவி அளித்து அதன் பிறகு மருத்துவமனைக்கு கொண்டு செல்வார்கள். இதுபோல் உடனுக்குடன் மருத்துவம் சம்பந்தப்பட்ட இடத்திலேயே முதலுதவி செய்வதினால் தீக்காயம் பாதிப்பில் உள்ள தீவிரம் குறையும். ஒரு சில புதிய பட்டாசுகள் சிறு குழந்தைகளின் கண்களை பாதிக்கும் அளவிற்கு வெளிச்சத்தை அளித்து அவர்களின் கண்களுக்கு பாதிப்பு உண்டாக்குகிறது. எனவே அது போன்ற பட்டாசுகளை பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் கவனமாக கையாள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.
தற்பொழுது அவசர உதவி தேவைப்படுபவர்களின் இருப்பிடத்தை சரியாக கண்டறிவதற்கு அவசரம் 108 என்ற மொபைல் ஆப் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ளது. இது இரவில் நீண்ட தூரம் சாலையில் பயணிப்பவர்கள் தாங்கள் எங்கு இருக்கிறோம் என்று கூற முடியாத மற்றும் தெரியாத நபர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆக உள்ளது. இந்த ஆப்பை டவுன்லோடு செய்து அதில் 108 எண்ணிற்கு தொடர்பு கொள்ளும் பொழுது பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தினை கூற வேண்டிய அவசியம் இருக்காது. பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்தை ஜிபிஎஸ் மூலமாக துல்லியமாக கண்டறிந்து அவர்களுக்கு அருகாமையில் உள்ள ஆம்புலன்ஸை உள்ள இடத்திற்கு அனுப்புவதற்கு முடிகிறது. அவர்களுக்கு வரும் வாகனத்தில் ஜிபிஎஸ் மூலம் பொதுமக்கள் தங்கள் மொபைல் போனில் தெரிந்து கொள்ளலாம்.
தீபாவளி பண்டிகையின் போது எப்பொழுதும் வரும் அவசர அழைப்புகளை விட கூடுதலாக இரண்டு மடங்கு அழைப்புகள் ஒவ்வொரு வருடமும் வருகிறது. இதனை கருத்தில் கொண்டு 108 சேவை தலைமை அலுவலகம் கூடுதல் முன்னேற்பாடுகள், அதிகப்படியான ஊழியர்கள் பணியில் இருக்கும் படி செய்து தயார் நிலையில் உள்ளது. தீபாவளி முடித்தது அனைத்து ஊழியர்களும் விடுமுறை இன்றி பணிக்கு வரும்படி நிறுவனம் அனைத்து ஊழியர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளது.
அனைத்து அரசு பொது மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை களுக்கு புதிதாக Pre Arrival Intimation வருகையை முன்கூட்டியே தெரிவிப்பதற்கு ஒரு பிரத்தியோக மொபைல் எண் அனைத்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தரப்பட்டுள்ளது. இந்த எண்ணில் 108 பணியாளர்கள் நோயாளியை ஏற்றிக்கொண்டு கிளம்பும் பொழுது அருகாமையில் உள்ள மருத்துவ கல்லூரி அல்லது தலைமை மருத்துவமனை க்கு தகவல் தெரிவித்து அவர்களை தயார் நிலையில் இருப்பதற்கும் நோயாளி வந்தவுடன் சிகிச்சை உடனுக்குடன் அளிப்பதற்கும் தேவைப்பட்டால் அதிக அளவு மருத்துவர்களை வரவழைப்பதற்கும் உதவுகிறது.
அரசின் வழிகாட்டுதல் வழிமுறைகளை பின்பற்றி அனைவரும் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாட 108 சேவை அனைவருக்கும் பாதுகாப்பான தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை, தூத்துக்குடி, குமரி உட்பட உள்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 4:32:24 PM (IST)

குமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை!
வெள்ளி 17, அக்டோபர் 2025 10:25:13 AM (IST)

குடியிருப்பு பகுதிக்கு வந்த மலைப்பாம்பு : பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!
வியாழன் 16, அக்டோபர் 2025 8:07:39 PM (IST)

புனித தேவசகாயம் திருத்தலத்தில் இன்று நன்றி திருப்பலி : ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் பங்கேற்பு
புதன் 15, அக்டோபர் 2025 8:06:41 PM (IST)

நாகர்கோவிலில் 17ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்!
புதன் 15, அக்டோபர் 2025 4:32:26 PM (IST)

தீபாவளியை முன்னிட்டு கன்னியாகுமரிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
புதன் 15, அக்டோபர் 2025 3:27:24 PM (IST)
