» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

உடையார்விளையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் : முன்னாள் அமைச்சர் பச்சைமால் மரியாதை

சனி 17, ஜனவரி 2026 3:19:54 PM (IST)


குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள உடையார்விளையில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவில், அஇஅதிமுக கல்லுக்கூட்டம் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் அகஸ்டின் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் பச்சைமால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் அஇஅதிமுக கன்னியாகுமரி மாவட்ட பொருளாளர் திலக், மாநில எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் வழக்கறிஞர் சிவ செல்வ ராஜன், கழக முன்னோடி எஸ்.எம். பிள்ளை, அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆறுமுகராஜா, மற்றும் குளச்சல் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் ரவீந்திர வர்ஷன், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் ஜான்சன், அம்மா ஆண்டனி, அமல் ராஜ், ஏசுதாஸ், ஆட்டோ ஆரோக், ஹோட்டல் ராதா, லூயிஸ், ஆகாஷ், ஆண்ட்ரூஸ், அபிஷேக், சுப்பிரமணியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றுச் சிறப்பித்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory