» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில்- நியூ ஜல்பைகுரி அமித் பாரத் ரயில் அறிவிப்பு வழித்தடத்தில் சிறிய மாற்றம் தேவை!
ஞாயிறு 11, ஜனவரி 2026 12:48:03 PM (IST)
கன்னியாகுமரி – சென்னை மார்க்கத்தில் தினசரி அமித் பாரத் ரயில் அறிவித்து இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகர்கோவிலிருந்து மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி என்ற இடத்துக்கு வாராந்திர அமித் பாரத் ரயிலை அறிவித்துள்ளது. இந்த ரயில் திருநெல்வேலி,மதுரை, திண்டுக்கல், பழநி,பொள்ளாச்சி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், காட்பாடி, ரேணிகுண்டா வழியாக ஆந்திரா மாநிலம் சென்று பின்னர் நியூஜல்பைகுரி சென்று சேர்கிறது. அதற்கான காலி ரயில் பெட்டிகள் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் மாண்புமிகு ரயில்வே அமைச்சர் மற்றும் மாண்புமிகு பிரதமர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.
அமித் பாரத ரயில் : ரயில்வே அமைச்சகம் எல்எச்பி பெட்டிகள் கொண்டு மெமு ரயில்கள் போல் இயக்கி அமித் பாரத் ரயில்கள் என்ற பெயரில் பல்வேறு வழித்தடங்களில் வருகிறது. தமிழ்நாட்டில் ஈரோடிலிருந்து பீகார் மாநிலத்தில் உள்ள ஜோக்பானி என்ற இடத்திற்கு வாராந்திர அமித்பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
• கிடைமட்ட ஸ்லைடிங் ஜன்னல்கள்
• பெட்டிகளுக்கு இடையேயான செமி-பெர்மனென்ட் கப்ளர்
• தூசி தடுக்கும் அகலமான கேங்க் வேக்கள்
• கழிப்பறைகள் மற்றும் மின்சார க்யூபிகல்களில் ஏரோசால் அடிப்படையில் தீயணைப்பு அமைப்பு
• அவசர பேரிடர் மேலாண்மை விளக்கு
• தரை வழிகாட்டி ஃப்ளோரசன்ட் ஸ்ட்ரிப்ஸ்
• ஊனமுற்றோர் பெட்டிகளுக்கு பிரத்தேக பெஞ்ச் வகை வடிவமைப்பு
• முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை தனிமை படுத்த கதவுகள் போன்ற சிறப்பு அம்சங்கள் உள்ளன.
இந்த அமித் பாரத் ரயிலில் முன்பதிவு செய்யப்படாத இரண்டாம் வகுப்பு இருக்கை மற்றும் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் இருக்கும். குளிர்சாதன பெட்டிகள் இருக்காது.
தற்போது இந்தியன் ரயில்வேயில் முழுவதும் வெவ்வேறு வழித்தடங்களில் 15 அமித் பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரே ஒரு வழித்தடத்தில் புதுடெல்லி – பாட்னா (ராஜேந்திர நகர்) தினசரி அமித் பாரத் ரயில் இயக்கப்படுகிறது. மீதமுள்ள ரயில்களில் வாரம் இருமுறை, வாரம் மூன்று முறை என்றும் அதிக அளவில் வாராந்திர ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டுக்கு நாகர்கோவில் - நியூஜல்பைகுரி மற்றும் திருச்சி – ஜெபல்குரி ஆகிய இரண்டு தடங்களில் அமித்பாரத் ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு ரயில்களின் தேவை அதிக அளவில் உள்ளது.
ஆகவே இந்த ரயில்கள் வழித்தடத்தில் இயக்கத்தில் ஒரு சில மாற்றங்கள் செய்து இயக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்று தென்மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
1. முதல் அமித் பாரத் ரயிலை வடமாநில தொழிலாளர்கள் நலன் கருதி மதுரையிலிருந்து புறப்பட்டு திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர், சேலம், காட்பாடி, ரேணிகுண்டா வழியாக இயக்க வேண்டும்.
2. இரண்டாவது அமித் பாரத் ரயிலை தென்மாவட்ட பயணிகள் நலன்கருதி நாகர்கோவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டு திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், விழுப்புரம், தாம்பரம் சென்னை வழியாக இயக்க வேண்டும்.
இவ்வாறு இயக்கும் போது ஞாயிற்றுக்கிழமை தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ரயில்வே துறையின் வருவாய் அதிக அளவில் இருக்கும்.
இது மட்டுமல்லாமல் கன்னியாகுமரி – சென்னை மார்க்கத்தில் தினசரி அமித் பாரத் ரயில் அறிவித்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உங்க கனவ சொல்லுங்க திட்டத்தில்1057 தன்னார்வலர்கள் தேர்வு: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 9, ஜனவரி 2026 4:52:17 PM (IST)

அனைவரும் சாலைவிதிகளை மதிக்க வேண்டும்: எஸ்பி ஸ்டாலின் வேண்டுகோள்
வெள்ளி 9, ஜனவரி 2026 3:25:46 PM (IST)

நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
வியாழன் 8, ஜனவரி 2026 3:37:10 PM (IST)

குமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 வழங்கும் திட்டம் துவக்கம்
வியாழன் 8, ஜனவரி 2026 12:54:42 PM (IST)

நாகர்கோவில் சந்திப்பில் ரயில் சேவை மாற்றம் : குமரியில் இருந்து ரயில்கள் இயக்கம்!
புதன் 7, ஜனவரி 2026 4:37:07 PM (IST)

சான்றிதழ் வாங்கி வந்த இளைஞர்கள் பஸ் மோதி உயிரிழப்பு - குமரியில் சோகம்!
புதன் 7, ஜனவரி 2026 11:12:54 AM (IST)

