» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் போக்குவரத்து சிக்னல் கம்பம் சரிந்து விழுந்தது: பெரும் விபத்து தவிர்ப்பு
திங்கள் 15, ஜூலை 2024 5:41:59 PM (IST)

தூத்துக்குடியில் பலத்த காற்றில் குரூஸ் பர்னாந்து பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்து சிக்னல் கம்பம் சரிந்து விழுந்தது.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள குருஸ் பர்னாந்து சிலை அருகே போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து சிக்னல் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாநகரில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக போக்குவரத்து சிக்னல் கம்பம் திடீரென கீழே சரிந்து விழுந்தது.
இரும்பால் ஆன அதிக எடை கொண்ட இந்த போக்குவரத்து சிக்னல் கம்பம் கீழே சாயும் போது வாகன ஓட்டிகள் யாரும் குறுக்கே செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து கீழே விழுந்த போக்குவரத்து சிக்னல் கம்பத்தை சாலையில் இருந்து அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)

இணையதளம் மூலமாக மட்டுமே சுகாதார சான்றிதழ் வழங்கப்படும் : ஆட்சியர் தகவல்
திங்கள் 30, ஜூன் 2025 12:19:27 PM (IST)

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்
ஞாயிறு 29, ஜூன் 2025 11:28:11 AM (IST)

யார் ?மே 16, 1721 - 12:30:00 PM | Posted IP 172.7*****