» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சிறுமி கடத்தல்: தலைமறைவான அண்ணன், தம்பி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!

செவ்வாய் 6, ஜனவரி 2026 12:13:24 PM (IST)

சிறுமியை கடத்திய வழக்கில் தலைமறைவான அண்ணன், தம்பி இருவரை தேடப்படும் குற்றவாளியாக சாத்தான்குளம் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை விவேகானந்தபுரத்தை சேர்ந்தவர் பீட்டர் ஜெசுமரியான் அவரது மகன்கள் விஜயேந்திரன் மற்றும் கோபி ஆகிய இருவரும் 2001 நடந்த சிறுமியை கடத்தல் வழக்கில் விஜேந்திரன் அவரது தம்பி கோபி இருவரும் குற்றவாளியாக இருந்து வருகின்றார்கள். 

இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இச்சம்பத்துக்கு பிறகு விஜயேந்திரன் மற்றும் கோபி குடும்பத்துடன் மாயமாகிவிட்டார். இவருக்கு 2006 ஆம் ஆண்டு சாத்தான்குளம் கோர்ட் பிடியாணை பிறப்பித்தது. கடந்த 26 ஆண்டாக அவரை தேடியும் எந்த தகவலும் இல்லாததால் தற்போது சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றம் நேற்று அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory