» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கோதையாற்றில் மீண்டும் தென்பட்ட முதலை: திற்பரப்பு அருகே பரபரப்பு !

செவ்வாய் 6, ஜனவரி 2026 4:41:22 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருகே உள்ள தோட்டவாரம் - கடையால் செங்குழிக்கரை பகுதியில், கோதையாற்றில் மீண்டும் முதலை தென்பட்டது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டாவது முறையாக நேற்று அதே பகுதியில் முதலை நடமாட்டம் இருந்துள்ளது. அந்த வழியாகச் சென்ற சிறுவர்கள், ஆற்றில் முதலை இருப்பதைக்கண்டு தங்களது அலைபேசியில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.அடிக்கடி முதலை தென்படுவதால், ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் மக்கள் மற்றும் குளிக்கச் செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory