» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கல்லூரி மாணவர்கள் நிரந்தர நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் : ஆட்சியரிடம் எஸ்எப்ஐ மனு!

திங்கள் 15, ஜூலை 2024 12:25:39 PM (IST)



தூத்துக்குடியில் கட்டண உயர்வைக் கண்டித்து போராடிய கல்லூரி மாணவர்களின் நிரந்தர நீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று எஸ்எப்ஐ கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்திய மாணவர் சங்க மாவட்ட குழு நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் கல்வி கட்டணத்தை உயர்த்தி உள்ளதைக் கண்டித்து போராட்டத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதில், 11 பேரை இடை நீக்கம் மற்றும் 3 பேரை நிரந்தர நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் அரசு உதவி பெறும் கல்லூரிகளும் இதனை பயன்படுத்திக் கொண்டு ஏழை எளிய மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகங்கள் போட்டி போட்டுக் கொண்டு வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால். ஏழை, எளிய மாணவர்களின் கல்வி கனவு என்பது கேள்விக்குறியாக உள்ளது.

நிரந்தரநீக்கம் செய்யப்பட்ட மாணவர்களுக்கு ரிப்பீட் என்ற முறையை பயன்படுத்தி பழிவாங்க கூடிய சூழல் ஏற்படும். ஆகவே பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வருகை பதிவேடு பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும். அதுமட்டுமில்லாமல் மாணவர்கள் மீது கல்லூரிக்கு வருகை தராத மாணவர்களுக்கு கூட குற்றப்பத்திரிக்கை என்கிற பெயரில் பொய்யான செய்திகளை பெற்றோர்களிடம் சித்தரித்து வருகின்றனர். 

குற்றப்பத்திரிக்கை என்கிற பெயரில் மாணவர்களின் வீட்டிற்கு தபால் மூலமாக அனுப்பி அதற்கு ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் இல்லை என்றால் சட்டப்படியான நடவடிக்கைக்கு உங்களது மகன்/ மகள் உள்ளாக்கப்படுவார்கள் என மாணவர்களின் பெற்றோரிடம் தபால் மூலமாக தெரிவிக்கின்றனர். ஆகவே காமராஜர் கல்லூரியில் நிரந்தர நீக்கம் செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக கல்லூரிக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

Padichu munnerra valiya parungaJul 15, 2024 - 02:08:12 PM | Posted IP 162.1*****

ungal oruthar mugathai parthalum padikka vantha mathiri theriyalaye..... poi olunga padikiravaliya parungada....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory