» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் தின்று பொறியியல் மாணவா் தற்கொலை

செவ்வாய் 5, டிசம்பர் 2023 5:23:53 PM (IST)

குளச்சலில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் தின்று பொறியியல் மாணவா் தற்கொலை செய்தது தொடா்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சாஸ்தான் கரையைச் சோ்ந்த கிருஷ்ணதாஸ் (53), குளச்சலில் நகைக் கடை நடத்தி வருகிறாா். இவா், சில ஆண்டுகளுக்கு முன்பு மணவாளக்குறிச்சி பிள்ளையாா் கோயில் தெருவில் புதிய வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவரது மகன் ராம்குமாா் (27), மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஐஐடி-யில் முதுநிலைப் பொறியியல் 2ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

கடந்த 40 நாள்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த இவா், பின்னா் கல்லூரிக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தே படிப்பதாகக் கூறினாராம். இவா் கடந்த சனிக்கிழமை இரவு (டிச.2) தனது அறைக்கு தூங்கச் சென்றாா். ஞாயிற்றுக்கிழமை காலை வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. சாப்பிட வருமாறு தாய் அழைத்தபோது, பின்னா் வருவதாக அறைக்குள் இருந்தவாறே ராம்குமாா் பதிலளித்தாராம். மாலை நேரமாகியும் அவா் வெளியே வரவில்லை. தாய் அழைத்தும் பதிலில்லை.

தகவலின்பேரில், கிருஷ்ணதாஸ் வந்து அறைக் கதவை உடைத்து பாா்த்தபோது, வாயில் நுரை தள்ளிய நிலையிலும், மூக்கில் ரத்தம் வழிந்த நிலையிலும் ராம்குமாா் மயங்கிக் கிடந்தாராம். உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் வந்து பரிசோதித்தபோது, ராம்குமாா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.

மண்டைக்காடு போலீசா சென்று, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ராம்குமாரின் அறையை போலீசா சோதனையிட்ட போது, தூக்க மாத்திரை, மருந்துகள் கிடந்தது தெரியவந்தது. அவா் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. போலீசா வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory