» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை
சனி 10, மே 2025 12:06:40 PM (IST)
குமரி மாவட்டத்திற்குட்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பில், "முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்குப் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மூலமாக மாதந்தோறும் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நான் முதல்வன் திட்டம் மூலம், வேலைவாய்ப்பிற்கான பயிற்சிகள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், அரசால் வழங்கப்படும் கல்வி உதவித் தொகைகள் மற்றும் இலவசப் பேருந்து வசதிகளும் உள்ளன. திறமை வாய்ந்த ஆசிரியர்களால் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளும் சிறப்பாக உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 07.05.2025 முதல் 27.05.2025 வரை பதிவுசெய்யலாம். தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கன்னியாகுமரி அரசு மற்றும் அறிவியல் கல்லுரி என இரண்டு அரசு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை உதவி மையங்களை அணுகி விண்ணப்பித்து பயன்பெறும்படி கேட்டுக்கொள்கிறேன்.
விண்ணப்பக் கட்டணம் ஒரு மாணவருக்கு ரூ.48, பதிவுக் கட்டணம் ரூ.2/- மட்டும். SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. ஆனால் பதிவுக்கட்டணம் ரூ.2 மட்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணங்களை Debit Card, Credit Card, UPI ID மூலம் செலுத்தலாம். சனி கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் B.A - Economics, English, History, Tamil, B.com Commerce, B.Sc - Computer Science, Mathematics, Physics, Statistics, Zoology, Botany, B.B.A ஆகிய பாடப்பிரிவுகளும், கன்னியாகுமரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் B.A English, B.B.A, B.com, B.Sc - Mathematics, Physics, Chemistry, B.C.A ஆகிய பாடப்பிரிவுகளும் உள்ளன.
மேலும் நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் 9443117563, 8838567343 ஆகிய தொலைபேசி எண்களிலும், கன்னியாகுமரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் 9488232573, 9080531387 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவுகளில் விண்ணப்பித்து தங்கள் உயர்கல்வியை பயிலும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தான் என்ற நாடு இனியும் இருக்கக் கூடாது : அஞ்சுகிராமத்தில் அண்ணாமலை பேச்சு
சனி 10, மே 2025 5:02:28 PM (IST)

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2000 பயனாளிகள் தேர்வு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
சனி 10, மே 2025 4:31:37 PM (IST)

மகளிர் சுய உதவி குழுவினரின் மீன் உற்பத்தி பொருட்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
சனி 10, மே 2025 4:02:48 PM (IST)

பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு சேவை மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்: மாணவர்களுக்கு அழைப்பு!
சனி 10, மே 2025 10:57:29 AM (IST)

நாகர்கோவில் - ஷாலிமார் ரயிலை தாம்பரம் வரை நீட்டித்து ஒரே எண்ணில் இயக்க கோரிக்கை
சனி 10, மே 2025 10:44:08 AM (IST)

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
வெள்ளி 9, மே 2025 4:00:54 PM (IST)
