» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
உரிய அனுமதி பெற்ற பிறகே கட்டிட பணிகளை மேற்கொள்ள வேண்டும் : ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 5, டிசம்பர் 2023 12:07:26 PM (IST)
இணையவழி கட்டிட வரைபட அனுமதி பெற்ற பின்னரே கட்டிட பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஊராட்சிகள் கட்டிட விதிகள் 1997, பிரிவு 4 -ன்படி கட்டிட வரைபட அனுமதி வழங்கிட கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கட்டிடம் அல்லது குடிசையை கட்ட அல்லது புனரமைக்க அல்லது மாற்ற அல்லது கட்டிடத்தை சேர்க்க விரும்பும் ஒவ்வொரு நபரும், தளத்தின் ஒப்புதலுக்காகவும் வேலை செய்வதற்கான அனுமதிக்காகவும் நிர்வாக அதிகாரியிடம், பிற்சேர்க்கை B-ல் குறிப்பிட்டுள்ள படிவத்தில் ஒப்புதல் பெற வேண்டும், தேவைப்படக்கூடிய சூழ்நிலைகள் போன்ற மாறுபாடுகள் அதனுடன் இருக்க வேண்டும்
அ) பிற்சேர்க்கை C-ல் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளுக்கு இணங்க கட்டிடம் அல்லது குடிசையை புனரமைக்க அல்லது மாற்றியமைக்க அல்லது தேவையான அளவுக்கு சேர்க்க வேண்டிய நிலத்தின் தளத்திட்டம் (மூன்று)
ஆ) பிற்சேர்க்கை D-ல் குறிப்பிட்டுள்ள தேவைகளுக்கு இணங்க கட்டப்பட்ட புனரமைக்க அல்லது மாற்றியமைக்க அல்லது தேவைப்படக்கூடிய கட்டிடம் அல்லது குடிசையின் திட்டம் அல்லது திட்டங்கள்(மூன்று)
இ) பிற்சேர்க்கை E ல் குறிப்பிட்டுள்ள தேவைகளுக்கு இணங்க தேவையான அளவு விவரக்குறிப்பு (மூன்றும்) மற்றும்
ஈ) கட்டிட அல்லது குடிசை எந்த நோக்கத்திற்காக அல்லது மாற்றியமைக்க அல்லது சேர்க்க முன்மொழியப்பட்டது என்பது பற்றிய தகவல்.
எனவே, தமிழ்நாடு ஊராட்சிகள் கட்டிட விதிகள் 1997-ல் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளுக்கு உட்பட்டு கட்டிட வரைபட அனுமதி தொடர்பான விண்ணப்பத்தினை இணையவழியில் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து கிராம ஊராட்சி செயல் அலுவலரால் உரிய அனுமதியினைப் பெற்று அதன் பிறகே கட்டிட பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும்,
கிராம ஊராட்சிகளில் இணையவழி கட்டிட வரைபட அனுமதி பெறாமல் எந்தவொரு கட்டிட பணிகளும் மேற்கொள்ளக் கூடாது எனவும், கிராம ஊராட்சிகளில் இணையவழி கட்டிட வரைபட அனுமதி பெறாமல் கட்டிட பணிகள் மேற்கொண்டால் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தான் என்ற நாடு இனியும் இருக்கக் கூடாது : அஞ்சுகிராமத்தில் அண்ணாமலை பேச்சு
சனி 10, மே 2025 5:02:28 PM (IST)

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2000 பயனாளிகள் தேர்வு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
சனி 10, மே 2025 4:31:37 PM (IST)

மகளிர் சுய உதவி குழுவினரின் மீன் உற்பத்தி பொருட்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
சனி 10, மே 2025 4:02:48 PM (IST)

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை
சனி 10, மே 2025 12:06:40 PM (IST)

பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு சேவை மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்: மாணவர்களுக்கு அழைப்பு!
சனி 10, மே 2025 10:57:29 AM (IST)

நாகர்கோவில் - ஷாலிமார் ரயிலை தாம்பரம் வரை நீட்டித்து ஒரே எண்ணில் இயக்க கோரிக்கை
சனி 10, மே 2025 10:44:08 AM (IST)
