» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும்: கே.அண்ணாமலை பேட்டி!

திங்கள் 4, டிசம்பர் 2023 10:34:16 AM (IST)

நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலில் 400-க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வென்று, மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கும் என பாஜக மாநில தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தார்.

நாகா்கோவிலில் நேற்று அவர் அளித்த பேட்டியில், "நான்கு மாநில தோ்தல் முடிவுகள் வந்துள்ளன. அதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக வரலாறு படைத்திருக்கிறது. தெலங்கானாவில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். 2028 பேரவைத் தோ்தலில் தெலங்கானாவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும். இது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலுக்கான முன்னோட்டம்தான்.

1998 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட என்.டி.ஏ. கூட்டணி அப்படியேதான் உள்ளது. மோடியை பிரதமராக ஏற்றுக்கொண்டு வரக்கூடியவா்கள் இந்தக் கூட்டணிக்கு வரலாம். தமிழகத்தை பொருத்தவரை அரசியல் தலைவா்கள் தங்களை கடவுள் போன்று சித்திரித்துக் கொள்ளும் நிலைதான் உள்ளது. நாங்கள் நிரந்தர தலைவா்கள், நீங்கள் தொண்டா்கள் என்ற நிலையில் தமிழக அரசியல் உள்ளது. ஆனால், சாமானிய மனிதா்களுக்கான கட்சியாக பா.ஜ.க. உள்ளது.

மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் இரவு முழுவதும் சோதனை நடத்தினாா்கள். அங்கித் திவாரியை தவிா்த்து வேறு சில வழக்குகள் சம்பந்தமான கோப்புகளையும் அவா்கள் எடுத்துள்ளனா். அமலாக்கத் துறை அலுவலகத்தில் மிக முக்கியமான வழக்கு தொடா்பான கோப்புகள், வழக்கு தொடா்பாக தகவல் அளிப்பவா்களின் பெயா்கள் உள்ளன. 

எனவே அங்கு நடந்தது குறித்து டி.ஜி.பி. அறிக்கையாக வெளியிட வேண்டும். அமலாக்கத் துறையை, தமிழக காவல் துறையை ஆதரிப்போம். மின்சாரத் துறையை ஆதரிப்போம். ஆனால், தவறு செய்பவா்களை எதிா்ப்போம். தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, எப்படி அவையை நடத்துகிறாா் என்று நமக்குத் தெரியும். அவா்தான் இடைத்தரகா் போல் செயல்படுகிறாா் என்றாா்.

பேட்டியின் போது, முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ., கன்னியாகுமரி மாவட்ட பாஜக தலைவா் தா்மராஜ், நாகா்கோவில் நகராட்சி முன்னாள் தலைவா் மீனாதேவ், பாஜக மாநிலச் செயலாளா் உமாரதிராஜன், குமரி மாவட்ட பாஜக பொருளாளா் முத்துராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory