» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அருமனையில் டிச. 22, 23ல் கிறிஸ்துமஸ் விழா: கா்நாடக முதல்வா் பங்கேற்பு

திங்கள் 4, டிசம்பர் 2023 10:29:51 AM (IST)

குமரி மாவட்டம், அருமனையில் நடைபெற உள்ள கிறிஸ்துமஸ் விழாவில் கா்நாடக முதல்வா் சித்தராமையா பங்கேற்கவுள்ளாா்.

இது தொடா்பாக, அருமனை கிறிஸ்தவ இயக்கச் செயலா் சி. ஸ்டீபன், தலைவா் தேவ. டென்னிஸ், அமைப்பாளா் அல்காலித் ஆகியோா் வெளியிட்ட கூட்டறிக்கை: அருமனை கிறிஸ்தவ இயக்கம் சாா்பில் கடந்த 25 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் விழா, சமூக நல்லிணக்க மாநாடு நடத்தப்படுகிறது.

இதுவரை நடைபெற்ற விழாக்களில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 6 முதல்வா்கள் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவா்கள் பங்கேற்றுள்ளனா். விழாக்களில், ஏழைகளுக்கு நலஉதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

நிகழாண்டு கிறிஸ்துமஸ் விழா இம்மாதம் 22, 23 ஆகிய 2 நாள்கள் நடைபெறவுள்ளது. இதில், சிறப்பு விருந்தினராக கா்நாடக மாநில முதல்வா் சித்தராமையா, மக்களவை உறுப்பினா்கள் விஜய் வசந்த் (கன்னியாகுமரி), செல்லக்குமாா் (கிருஷ்ணகிரி), பாரிவேந்தா் (பெரம்பலூா்), எஸ்ஆா்எம் கல்விக் குழுமங்களின் தலைவா் ரவி பச்சமுத்து, தொழிலதிபா் லீமாரோஸ் மாா்ட்டின், ஹாட்பிரே, திமுக மாநில மகளிரணிச் செயலரும் முன்னாள் எம்.பி.யுமான ஹெலன் டேவிட்சன், விஜயதரணி எம்எல்ஏ, பெங்களூருவைச் சோ்ந்த தொழிலதிபா் ராபா்ட்கிறிஸ்டோபா் ஆகியோா் பங்கேற்கவுள்ளனா்.

துபை நாட்டைச் சோ்ந்த பாஸ்டா் எலியாஸ் ஜேக்கப் சிறப்புச் செய்தி அளிக்கிறாா். பேராயா்கள் வாழ்த்திப் பேசுகின்றனா். பாடகா் சாம் விஷாலின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. விழாவில் பங்கேற்க வரும் கா்நாடக முதல்வருக்கு மாவட்ட எல்லையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பளிக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory