» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில் நீச்சல் குளம் ரூ.14½ இலட்சம் மதிப்பில் சீரமைப்பு : ஆட்சியர் ஸ்ரீதர் திறந்து வைத்தார்!

சனி 2, டிசம்பர் 2023 3:57:22 PM (IST)



நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்க வளாகத்தில் ரூ.14.50 இலட்சம் மதிப்பில் மறு சீரமைக்கப்பட்ட நீச்சல் குளம் கட்டிடத்தினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா விளையாட்டு மைதான வளாகத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு செயல்பட்டில் இருந்த நீச்சல் குளமானது கடந்த பல ஆண்டுகளாக பழுதுடைந்து காணப்பட்டதால் நீச்சல் பயிற்சி மேற்கொள்வது மிகவும் சிரமம் ஏற்பட்டு இருந்தநிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நீச்சல் குளம் மற்றும் அது அமைந்துள்ள சுற்றுவட்டாரப் பகுதியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, பழுதுடைந்த கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவத்தார்கள்.

அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, பொது நிறுவன சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.14.50 இலட்சம் மதிப்பில் நிதிஒதுக்கீடு செய்ய ஆணை பிறப்பித்து பணியினை உடனடியாக தொடங்கவும் பொதுப்பணித்துறைக்கு அறிவுறுத்தியதன் அடிப்படையில் பணிகள் தொடங்கப்பட்டு முடிவுற்ற நிலையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், இன்று (02.12.2023) நீச்சல் வீரர் வீராங்கனைகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்கள்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், தெரிவிக்கையில், புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தில் முக்கிய பிரமுகர்கள் தாங்குவதற்கான அறை, பயிற்சியாளர் அறை, உடைமாற்றும் அறை, வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான தனி கழிப்பறை, நவீன குளியலறை, பொதுமக்களுக்கென தனி கழிப்பறை உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் நீச்சல் வீரர் வீராங்கனைகளை தவிர்த்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய கட்டிடத்தில் டிக்கெட் கவுண்டர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் ஒருமணி நேரம் நீச்சல் பயிற்சி மேற்கொள்ள ரூ.59 கட்டணம் வசூலிக்க மாவட்ட விளையாட்டு அலுவலர்க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே இப்புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தினை சிறப்பாக பராமரிப்பதோடு சிறந்த நீச்சல் வீரர் வீராங்கனைகளாக விளங்கி மாநில தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகள் பெறுமாறு கேட்டுக் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி மேற்கொள்ளும் வீராங்களைகள் தங்கும் அறைகளின் அடிப்படை வசதிகள் கேட்டு அறிந்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ், நீச்சல் பயிற்சியாளர்கள், நீச்சல் வீரர் வீராங்கனைகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory