» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பைக் மீது டெம்போ மோதி 2 வாலிபர்கள் பலி: குழித்துறை அருகே சோகம்!

சனி 2, டிசம்பர் 2023 3:52:46 PM (IST)

குழித்துறை அருகே பைக் மீது பால் டெம்போ மோதி 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

குமரி மாவட்டம் புதுக்கடை அருகே அம்சி பகுதியை சேர்ந்தவர் விபின் (19), கூலி தொழிலாளி. இவரும், அதே ஊரை சேர்ந்தவர் வினித் (20), பிளம்பிங் தொழிலாளியும் நண்பர்கள். வினித்துக்கு செல்போன் வாங்குவதற்காக நேற்று இரவு 2 பேரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் காப்பிக்காடு பகுதிக்கு சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளை விபின் ஓட்டி சென்றார். 

அவர்கள் இருவரும் காப்பிக்காடு பகுதியில் உள்ள செல்போன் கடைக்கு சென்று செல்போன் ஆர்டர் செய்தனர். பின்னர் குழித்துறை பகுதியில் உள்ள விபின் உறவினர் வீட்டுக்கு சென்றனர். அப்போது அவர்கள் மோட்டார் சைக்கிளில் குழித்துறை அருகே ஆற்றுப் பாலம் பகுதியில் வந்தபோது எதிரே கேரளாவில் இருந்து பால் ஏற்றி வந்த மினி டெம்போ எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தனர். விபின் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வினித் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை பரிதாபமாக இறந்தார். விபத்து தொடர்பாக களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory