» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஈரான் - இஸ்ரேல் போர் சூழல்: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை அவசர ஆலோசனை!
வியாழன் 26, மார்ச் 2026 4:30:06 PM (IST)
மேற்காசியாவில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் அதன் தாக்கம் குறித்து, அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை (மார்ச் 27) மாலை காணொலி வாயிலாக அவசர ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளதால் உலக நாடுகளிடையே பெரும் பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக, ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கடல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளதோடு, சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலைகள் உயரும் அபாயமும் உள்ளதால், இந்த நெருக்கடியைச் சமாளிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலங்களில் எரிபொருள் இருப்பு மற்றும் தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும்.
இந்தியா மற்றும் சீனா போன்ற நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ள நிலையில், அதன் சாதக பாதகங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம். கடந்த மார்ச் 25 அன்று டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தொடர்ச்சியாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
5 மாநிலங்களுக்கு விலக்கு: தற்போது தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026 அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் (MCC) அமலில் உள்ளன. எனவே, இந்த 5 மாநிலங்களின் முதல்வர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடக்கும் மாநிலங்களின் நிர்வாகம் பாதிக்கப்படக்கூடாது என்பதால், அந்த மாநிலங்களின் தலைமைச் செயலர்களுடன் (Chief Secretaries) மட்டும் தனியாக ஒரு கூட்டத்தை நடத்தி, நிலைமையைக் கண்காணிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எத்தனால் பெட்ரோல் வாகனங்களுக்குக் காப்பீடு மறுப்பு? வதந்திகளுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி!
புதன் 24, ஜூன் 2026 5:03:34 PM (IST)

மம்முட்டி, மாதவன் உள்ளிட்ட 65 பேருக்கு பத்ம விருதுகள் குடியரசுத் தலைவர் விருது வழங்கினார்!
புதன் 24, ஜூன் 2026 11:14:06 AM (IST)

பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு தொழிலதிபர் கொலை : வருங்கால மனைவி, காதலன் கைது!
புதன் 24, ஜூன் 2026 11:07:28 AM (IST)

திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்: மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 12:05:48 PM (IST)

லக்னோ அனிமேஷன் பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: மாணவர்கள் உட்பட 15 பேர் பலி!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:44:03 AM (IST)

இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயிலுக்கு ரயில்வே வாரியம் அதிகாரப்பூர்வ ஒப்புதல்!
திங்கள் 22, ஜூன் 2026 5:14:00 PM (IST)


