» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உத்தராகண்டைத் தொடர்ந்து குஜராத்: பொது சிவில் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
வியாழன் 26, மார்ச் 2026 12:19:21 PM (IST)

உத்தராகண்டைத் தொடர்ந்து குஜராத்தில் 'பொது சிவில் சட்ட மசோதா - 2026' சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
குஜராத் முதல்வர் புபேந்திர படேல், 'குஜராத் பொது சிவில் சட்டம் 2026' (Uniform Civil Code - UCC) மசோதாவைச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா குறித்துச் சட்டமன்றத்தில் சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக விரிவான விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்குப் பிறகு, மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டம் மதம், சாதி பாகுபாடின்றி திருமணம், விவாகரத்து மற்றும் சொத்துரிமை ஆகியவற்றில் அனைவருக்கும் பொதுவான விதிமுறைகளை வழங்குகிறது:
இரண்டாவது திருமணத்திற்குத் தடை: வாழ்க்கைத் துணைவர் உயிரோடு இருக்கும்போது, இரண்டாவது திருமணம் செய்வது சட்டப்படி செல்லாது. துணைவர் உயிரிழந்தால் அல்லது சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றால் மட்டுமே மறுமணம் செய்ய முடியும்.
லிவ்-இன் ரிலேஷன்ஷிப் (Live-in Relationship): திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வோருக்கும் (Live-in) கட்டாயப் பதிவு முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இவர்கள் பிரிந்து செல்ல விரும்பினால், முறையான அறிவிப்பு மூலம் உறவை முறித்துக் கொள்ளலாம்.
பொருந்தும் எல்லை: இந்தச் சட்டம் குஜராத் மாநிலத்தில் வசிப்பவர்களுக்கும், பிற மாநிலங்களில் வசிக்கும் குஜராத் மக்களுக்கும் பொருந்தும்.
விதிவிலக்கு: அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பின் கீழ் வரும் பழங்குடியின மக்களுக்கு இந்தப் பொது சிவில் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதன்முதலாக உத்தராகண்ட் மாநிலம் கடந்த 2024-ஆம் ஆண்டு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது குஜராத் அந்த வரிசையில் இணைந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எத்தனால் பெட்ரோல் வாகனங்களுக்குக் காப்பீடு மறுப்பு? வதந்திகளுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி!
புதன் 24, ஜூன் 2026 5:03:34 PM (IST)

மம்முட்டி, மாதவன் உள்ளிட்ட 65 பேருக்கு பத்ம விருதுகள் குடியரசுத் தலைவர் விருது வழங்கினார்!
புதன் 24, ஜூன் 2026 11:14:06 AM (IST)

பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு தொழிலதிபர் கொலை : வருங்கால மனைவி, காதலன் கைது!
புதன் 24, ஜூன் 2026 11:07:28 AM (IST)

திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்: மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 12:05:48 PM (IST)

லக்னோ அனிமேஷன் பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: மாணவர்கள் உட்பட 15 பேர் பலி!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:44:03 AM (IST)

இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயிலுக்கு ரயில்வே வாரியம் அதிகாரப்பூர்வ ஒப்புதல்!
திங்கள் 22, ஜூன் 2026 5:14:00 PM (IST)


