» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கேரள நபர் தற்கொலை: பாலியல் தொல்லை வீடியோ வெளியிட்ட இளம்பெண் கைது!
புதன் 21, ஜனவரி 2026 4:50:10 PM (IST)
கேரளாவில் இளம்பெண் வெளியிட்ட வீடியோவால் வாலிபர் தற்கொலை செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த இளம்பெண் சிம்ஜிதாவை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 42 வயதான தீபக் என்பவர், பேருந்தில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 16ம் தேதி அன்று, ஒரு பெண் பயணி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியேவில் அரசுப் பேருந்தில் பயணம் செய்தபோது 42 வயது (தீபக்) மதிக்கத்தக்க நபர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.
சுமார் 18 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில், நெரிசலான பேருந்தில் தீபக்கின் கை அந்தப் பெண்ணின் மீது உரசுவது போலக் காட்சிகள் இருந்தன. இது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, பல மில்லியன் பார்வைகளைப் பெற்றது. வீடியோவைப் பார்த்த பல நெட்டிசன்கள், ஒரு பக்கம் தீபக்கை திட்டித் தீர்த்தாலும், மறுபக்கம் பேருந்து நெரிசலில் அது தற்செயலாக நடந்ததாகத் தெரிவதாகவும், தீபக் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை என்றும் கருத்துத் தெரிவித்தனர்.
வீடியோ வைரலானதால் தீபக் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தீபக் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தீபக்கின் குடும்பத்தினர் அந்தப் பெண்ணுக்கு எதிராகப் புகார் அளித்துள்ளதை தொடர்ந்து, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் அப்பெண் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து வீடியோ வெளியிட்ட பெண் தலைமறையாகியுள்ளதாகவும் போலீசார் அவரை வலைவீசி தேடி வருவதாகவும் தகவல் வெளியாகினது. இந்நிலையில், உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ஷிம்ஜிதாவை போலீசார் இன்று கைது செய்தனர். முன்னதாக முன்ஜாமீன் கோரி ஷிம்ஜிதா கோழிக்கோடு மாநாட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 29, ஏப்ரல் 2026 5:09:27 PM (IST)

தமிழ்நாடு, கேரளா உட்பட 5 மாநிலத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறும்: பிரதமர் மோடி நம்பிக்கை!
புதன் 29, ஏப்ரல் 2026 4:49:22 PM (IST)

துருக்கியில் பதுங்கியிருந்த போதைப்பாொருள் கடத்தல் மன்னன் கைது: இந்தியாவுக்கு நாடு கடத்தல்!
புதன் 29, ஏப்ரல் 2026 11:49:58 AM (IST)

மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்டத் தேர்தல் விறுவிறுப்பு – காலை 9 மணி வரை 18.39% வாக்குகள் பதிவு!
புதன் 29, ஏப்ரல் 2026 10:29:03 AM (IST)

தெலங்கானாவில் கிரேன் சரிந்து விபத்து: பிஹார் தொழிலாளர்கள் 5 பேர் உயிரிழப்பு; 11 பேர் காயம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:36:14 PM (IST)

சகோதரியின் வங்கிப் பணத்தை எடுக்க சடலத்துடன் வந்த நபர்: ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 4:24:52 PM (IST)


