» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சிவசேனா கட்சியை பிரதமர் மோடி உடைத்தார் : உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு
வெள்ளி 9, ஜனவரி 2026 4:59:21 PM (IST)
பிரதமர் மோடிக்கு இருமுறை உதவி செய்த போதிலும் அவர் எனது சிவசேனா கட்சியை உடைத்தார் என்று உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2022 ஜூன் மாதம் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்தது. தற்போது உத்தவ் தாக்கரே தலைமையில் ஓர் அணியும், மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியும் செயல்படுகின்றன.
இதுதொடர்பாக உத்தவ் தாக்கரே பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "கடந்த 2014, 2019ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் பிரதமர் நரேந்திர மோடிக்காக நான் தீவிர பிரச்சாரம் செய்தேன். இருமுறை மோடிக்கு உதவி செய்த போதிலும் அவர் எனது கட்சியை உடைத்தார். அவர் பிரதமராக வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.
ஆனால் நான் அழிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார். மகாராஷ்டிராவில் இருந்து மும்பையை பிரிக்க வேண்டும் என்பது பாஜகவின் பழைய கனவு ஆகும். சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே கடந்த 2012-ம் ஆண்டு வரை வாழ்ந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் பாஜக வளைந்து நின்றது. தற்போது அவர் உயிரோடு இல்லாத சூழலில் காகித அளவில் சிவசேனாவை அழித்துவிட்டனர்.
ஆனால் மக்களின் மனங்களில் இருந்து சிவசேனாவை அழிக்க முடியாது. அரசியல் நாகரிகத்தை மீறி பாஜக செயல்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு நானும் ராஜ் தாக்கரேவும் ஒன்றிணைந்துள்ளோம். இனிமேல் நாங்கள் ஒரு போதும் பிரிய மாட்டோம். இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 ஜூன் மாதம் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்தது. தற்போது உத்தவ் தாக்கரே தலைமையில் ஓர் அணியும், மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியும் செயல்படுகின்றன.இதுதொடர்பாக உத்தவ் தாக்கரே பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "கடந்த 2014, 2019ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் பிரதமர் நரேந்திர மோடிக்காக நான் தீவிர பிரச்சாரம் செய்தேன். இருமுறை மோடிக்கு உதவி செய்த போதிலும் அவர் எனது கட்சியை உடைத்தார். அவர் பிரதமராக வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.
ஆனால் நான் அழிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார். மகாராஷ்டிராவில் இருந்து மும்பையை பிரிக்க வேண்டும் என்பது பாஜகவின் பழைய கனவு ஆகும். சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே கடந்த 2012-ம் ஆண்டு வரை வாழ்ந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் பாஜக வளைந்து நின்றது. தற்போது அவர் உயிரோடு இல்லாத சூழலில் காகித அளவில் சிவசேனாவை அழித்துவிட்டனர்.
ஆனால் மக்களின் மனங்களில் இருந்து சிவசேனாவை அழிக்க முடியாது. அரசியல் நாகரிகத்தை மீறி பாஜக செயல்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு நானும் ராஜ் தாக்கரேவும் ஒன்றிணைந்துள்ளோம். இனிமேல் நாங்கள் ஒரு போதும் பிரிய மாட்டோம். இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேதாந்தா மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லர் வெடித்து 10 பேர் பலி; 40 பேர் படுகாயம்!
புதன் 15, ஏப்ரல் 2026 12:12:11 PM (IST)

குடியரசுத் துணைத் தலைவர் இல்லத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா: பிரதமர் மோடி பங்கேற்பு!
புதன் 15, ஏப்ரல் 2026 12:08:02 PM (IST)

மகிழ்ச்சியும் வெற்றியும் பெருகட்டும்: பிரதமர் மோடி நெகிழ்ச்சியான தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 10:19:26 AM (IST)

திமுகவின் நோக்கம் அரசியல் ஆதாயம் மட்டுமே - முதல்வர் ஸ்டாலினுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:45:09 PM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம்: ராகுல் புறக்கணிப்பு? திமுக கூட்டணியில் சலசலப்பு!
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:32:03 PM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு: விரைவில் விசாரணை!
சனி 11, ஏப்ரல் 2026 4:54:44 PM (IST)