» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மகிழ்ச்சியும் வெற்றியும் பெருகட்டும்: பிரதமர் மோடி நெகிழ்ச்சியான தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 10:19:26 AM (IST)
உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
வாக்கிய முறைப்படி, 'விசுவாவசு' ஆண்டு நிறைவடைந்து, புதிய 'பராபவ' ஆண்டு இன்று பிறந்துள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகங்களும், வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் புத்தாடை அணிந்து, குடும்பத்துடன் கோவில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.பிரதமர் நரேந்திர மோடி தனது 'எக்ஸ்' (X) தளத்தில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது: "புனிதமான இந்தத் தமிழ் புத்தாண்டு நன்னாளில் அனைவருக்கும் எனது இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு முழுவதும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும், வெற்றியும், சிறந்த ஆரோக்கியமும் நிறைந்திருக்க நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்."
மேலும், இந்தப் பெருநாளின் சிறப்பைக் குறித்து அவர் கூறுகையில்: இந்த நாள் புதுப்பித்தல், நம்பிக்கை மற்றும் புதிய தொடக்கங்களுக்கான கொண்டாட்டமாகும். தமிழ்ப் பண்பாட்டின் இலக்கியம், இசை, கலை, தத்துவம் மற்றும் பக்தி ஆகியவற்றின் வளமான பாரம்பரியம், உலகெங்கிலும் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.
சிறப்புமிக்க இந்த நாள் நமது சமூகத்தில் ஒற்றுமை உணர்வை மேலும் வளர்க்கட்டும். "மகத்தான தமிழ்ப் பண்பாட்டால் உத்வேகம் பெற்று, நாம் வெற்றியின் புதிய சிகரங்களை எட்டுவதோடு, இயற்கையுடனான நமது பிணைப்பையும் ஆழப்படுத்திக் கொள்வோம்" எனப் பிரதமர் மோடி தனது பதிவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி திட்டம்: தயாரிப்பு செலவை குறைக்க அதிரடி நடவடிக்கை!
சனி 30, மே 2026 11:09:24 AM (IST)

மராட்டியத்தில் விஷச் சாராயம் குடித்த 14 பேர் பரிதாப பலி - 5 பேர் கவலைக்கிடம்: 8 பேர் கைது!
சனி 30, மே 2026 8:57:44 AM (IST)

கேரள சட்டப்பேரவையில் வந்தே மாதரம் பாடாததால் சர்ச்சை: ஆளுநர் அதிருப்தி!
வெள்ளி 29, மே 2026 3:46:47 PM (IST)

சவுதியில் மரண தண்டனையில் இருந்து மீண்ட அப்துல் ரஹீமுக்கு கேரள மக்கள் வரவேற்பு!
வெள்ளி 29, மே 2026 12:42:56 PM (IST)

உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதி பதவிக்கு கோவை மூத்த வழக்கறிஞர் மோகனா பரிந்துரை!
வியாழன் 28, மே 2026 5:00:02 PM (IST)

கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா அறிவிப்பு: டி.கே. சிவகுமார் நாளை பதவியேற்பு!
வியாழன் 28, மே 2026 12:44:09 PM (IST)


