» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திருப்பதியில் முதியோருக்கு 30 நிமிடங்களில் இலவச விஐபி தரிசனம்: புதிய திட்டம் தொடக்கம்!

செவ்வாய் 14, ஜூலை 2026 12:38:48 PM (IST)

ThirumalaChandrabab.jpg

ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு வரும் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், எவ்விதக் கட்டணமும் இன்றி 30 நிமிடங்களில் ஏழுமலையானைத் தரிசனம் செய்யும் புதிய இலவசத் திட்டத்தை முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்துள்ளார்.

திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை விடுமுறை நாட்களில் அதிகரிப்பதால், பொதுவழியில் தரிசனத்திற்குக் காத்திருக்கும் நேரம் 24 மணி நேரத்தைக் கடக்கிறது. இந்த நெரிசலில் சிக்கி முதியவர்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் இப்புதிய விரைவு இலவசத் தரிசனத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவைக்காக நாள்தோறும் காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை பிரத்யேக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் மற்றும் தரிசன வழிமுறை:
  • 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் தங்களது புகைப்பட அடையாள அட்டை (ஆதார் அட்டை) மற்றும் வயதுச் சான்றைக் கோவிற்பகுதியில் உள்ள 'எஸ்-1' (S-1) கவுண்டரில் காண்பிக்க வேண்டும்.
  • வயதுச் சான்று சரிபார்க்கப்பட்ட பின், அவர்கள் ஆலயத்தின் வலதுபுறச் சுவரையொட்டி, பாலத்தின் கீழ் அமைந்துள்ள மண்டபப் பாதை வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.
  • இப்பாதையில் படிக்கட்டுகள் எதுவும் அமைக்கப்படாததால், முதியவர்கள் எவ்வித சிரமமுமின்றி எளிதாக நடந்து சென்று 30 நிமிடங்களில் தரிசனத்தை முடிக்கலாம்.
தரிசனம் முடித்துத் திரும்பும் முதியவர்கள் அனைவருக்கும் தேவஸ்தானம் சார்பில் சூடான சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் பால் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், அவர்கள் வாகன நிறுத்துமிடத்தில் இருந்து கவுண்டருக்கும், தரிசனம் முடிந்து வெளியேறும் வாயிலில் இருந்து வாகன நிறுத்துமிடத்திற்கும் செல்வதற்குப் பேட்டரி கார் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory