» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அரசு விழாக்களில் இனி மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும்: மத்திய அரசு உத்தரவு!
சனி 11, ஜூலை 2026 3:40:12 PM (IST)
அரசு விழாக்களில் மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும் என உத்தரவிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, அரசு விழாக்களின் தொடக்கத்தில் முதலில் மாநிலப் பாடல் பாடப்பட வேண்டும். அதனைத் தொடர்ந்து தேசியப் பாடல் (வந்தே மாதரம்), இறுதியாக நிறைவாகத் தேசிய கீதம் (ஜன கண மன) பாடப்பட வேண்டும் என்ற வரிசைமுறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசியப் பாடல் மற்றும் தேசிய கீதத்தைப் பாடும்போது அதன் அசல் வரிகளையும், சரியான உச்சரிப்பு முறைகளையும் துல்லியமாகப் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தேசிய கீதம் அல்லது தேசியப் பாடல் கட்டாயம் இசைக்கப்பட வேண்டிய நிகழ்வுகள், அதேபோல் அவை இசைக்கப்படக்கூடிய விருப்பத்திற்குரிய நிகழ்வுகள் குறித்த விரிவான பட்டியலையும் தனது புதிய உத்தரவில் உள்துறை அமைச்சகம் உள்ளடக்கியுள்ளது.
அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள், மத்திய அமைச்சகங்களுக்கு இப் புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வரிசைமுறையைத் தவறாமல் பின்பற்றுமாறு மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட இவ்விதிமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யும் வகையில், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்குத் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்குமாறு அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள், மத்திய அமைச்சகங்களை உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சனி 29, ஆகஸ்ட் 2026 5:29:42 PM (IST)

அன்பையும், நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் ரக்ஷா பந்தன் : பிரதமர் மோடி வாழ்த்து
வெள்ளி 28, ஆகஸ்ட் 2026 11:38:17 AM (IST)

பான் மசாலா விளம்பர விவகாரம்: ஷாருக் கான் உள்பட 3 பாலிவுட் நடிகர்களுக்கு எஃப்டிஏ கெடு!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:18:56 PM (IST)

ஆந்திராவில் கோர விபத்து: ஆட்டோ மீது பஸ் மோதி 7 பேர் பலி; 4 குழந்தைகள் உள்பட 8பேர் படுகாயம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:05:07 PM (IST)

கேரளாவின் பெயர் அதிகாரப்பூர்வமாக மாற்றம்: உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியீடு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 4:01:24 PM (IST)

இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்கள் பட்டியலில் மு.க.ஸ்டாலின் - சி.ஜே.பி. தலைவர் பேட்டி!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:28:06 PM (IST)


