» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குடியரசுத் துணைத் தலைவர் இல்லத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா: பிரதமர் மோடி பங்கேற்பு!
புதன் 15, ஏப்ரல் 2026 12:08:02 PM (IST)

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இல்லத்திற்கு நேரில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
குடியரசுத் துணைத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்த பிரதமர் மோடியை, சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் வாசல் வரை வந்து வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். மாளிகையில் உள்ள பூஜை அறையில், இந்து தெய்வங்களின் படங்களுக்குப் பிரதமர் மோடி தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். இந்தச் சந்திப்பின் போது, பிரதமருக்கு நினைவுப் பரிசாக முருகன் திருவுருவப் படத்தை சி.பி. ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
இது குறித்து குடியரசுத் துணைத் தலைவர் தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் இன்று குடியரசுத் துணைத் தலைவர் மாளிகையில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். தமிழ்ப் புத்தாண்டு நமது முன்னோர்களின் ஞானத்தை வெளிப்படுத்துவதுடன் பாரம்பரியம், ஆன்மிகம் மற்றும் அறம் சார்ந்த வாழ்வைப் போற்றும் ஒப்பற்ற விழாவாகும். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படும் இந்தப் புத்தாண்டு தினத்தில், அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்."
பிரதமரின் வாழ்த்து: இந்தச் சந்திப்பு குறித்துப் பிரதமர் மோடியும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "சிறப்பு வாய்ந்த புத்தாண்டு தினத்தில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். அனைவரும் நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பெற்று விளங்கப் பிரார்த்திக்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருத்வாராவில் வழிபாடு: தமிழ்ப் புத்தாண்டு சந்திப்பைத் தொடர்ந்து, 'பைசாகி' பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் உள்ள ரகாப் கஞ்ச் சாஹிப் குருத்வாராவுக்குச் சி.பி. ராதாகிருஷ்ணன் சென்றார். அங்கு மக்களின் அமைதி மற்றும் நல்வாழ்விற்காக அவர் பிரார்த்தனை செய்தார். அப்போது டெல்லி துணைநிலை ஆளுநர் தரன்ஜித் சிங் சந்து, அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒருதலைக் காதல் விவகாரம்: பேருந்து நிலையத்தில் இளம்பெண் வெட்டிக்கொலை!
வெள்ளி 17, ஜூலை 2026 4:18:12 PM (IST)

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
வெள்ளி 17, ஜூலை 2026 12:31:26 PM (IST)

நீட் விவகார உண்ணாவிரதப் போராட்டம்: சோனம் வாங்சுக் உடல்நிலை 19வது நாளில் கவலைக்கிடம்!
வியாழன் 16, ஜூலை 2026 4:05:48 PM (IST)

தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பள்ளிகள் அமைவதைத் தடுக்க வேண்டாம் : உச்ச நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 16, ஜூலை 2026 12:47:39 PM (IST)

ரயில் டிக்கெட் முன்பதிவு இனி எளிது: புதிய அம்சங்களுடன் பீட்டா பதிப்பு அறிமுகம்!
வியாழன் 16, ஜூலை 2026 11:31:47 AM (IST)

தேசக் கட்டமைப்பிற்கு வாழ்வை அர்ப்பணித்தவர் காமராஜர்: பிரதமர் மோடி புகழஅஞ்சலி!
புதன் 15, ஜூலை 2026 4:47:47 PM (IST)


