» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம்: ராகுல் புறக்கணிப்பு? திமுக கூட்டணியில் சலசலப்பு!
திங்கள் 13, ஏப்ரல் 2026 3:32:03 PM (IST)
கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது எழுந்த சில கருத்து வேறுபாடுகளால், தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தை ராகுல் காந்தி புறக்கணிக்கக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதி (ஏப்ரல் 23, 2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளிடையே பிரசாரத் திட்டங்கள் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே தமிழகத்தில் பிரசாரம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, வரும் 15-ஆம் தேதி நாகர்கோவிலிலும், 18-ஆம் தேதி கோவையிலும் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்றுப் பேசுகிறார். இந்த நிகழ்வுகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
மறுபுறம், திமுக தலைமையிலான கூட்டணியின் முக்கியப் பொதுக்கூட்டம் சேலத்தில் நாளை மறுநாள் (ஏப்ரல் 15) நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வருமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு திமுக தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ராகுல் காந்தியின் வருகை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகவில்லை என்பது கூட்டணியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது எழுந்த சில கருத்து வேறுபாடுகளால், ராகுல் காந்தி பிரசாரத்தைப் புறக்கணிக்கக்கூடும் என்று தகவல்கள் பரவி வருகின்றன. முன்னதாக புதுச்சேரி பிரசாரத்தின்போது ராகுல் காந்தியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வெவ்வேறு நேரங்களில் பிரசாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர், ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் என்று கூறி வரும் நிலையில், திமுக தலைமை தனது கூட்டணித் தலைவர்கள் மூலம் அவரை அழைக்கத் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருப்பதியில் முதியோருக்கு 30 நிமிடங்களில் இலவச விஐபி தரிசனம்: புதிய திட்டம் தொடக்கம்!
செவ்வாய் 14, ஜூலை 2026 12:38:48 PM (IST)

தெலுங்கானாவில் சிறுமி உட்பட 6 பேர் கொலை வழக்கு: போக்சோ குற்றவாளி தற்கொலை!
செவ்வாய் 14, ஜூலை 2026 11:32:49 AM (IST)

பிரிவினைவாதிகளைப் புகழ்ந்து புத்தகம் வெளியீடு: 3 பதிப்பாளர்கள் அதிரடி கைது!
திங்கள் 13, ஜூலை 2026 12:07:20 PM (IST)

ராமர் கோவிலில் கொள்ளையடித்தவர்களைத் தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால் உறுதி!
திங்கள் 13, ஜூலை 2026 11:47:18 AM (IST)

பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி காலமானார்: பிரதமர் மோடி, முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல்!
ஞாயிறு 12, ஜூலை 2026 12:05:10 PM (IST)

அரசு விழாக்களில் இனி மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும்: மத்திய அரசு உத்தரவு!
சனி 11, ஜூலை 2026 3:40:12 PM (IST)


