» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சட்டவிரோத தகவல், படங்கள் பதிவிட்டால் தடை: பயனர்களுக்கு எக்ஸ் தளம் எச்சரிக்கை
திங்கள் 5, ஜனவரி 2026 12:11:59 PM (IST)
சட்டவிரோத தகவல்கள், படங்கள், வீடியோக்களை பதிவேற்றும் செய்தால் பயனர்களின் கணக்குகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்கப்படும் என்று எக்ஸ் தளம் எச்சரித்துள்ளது.
எலான் மஸ்கின் எக்ஸ் ஏ.ஐ. நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது கிரோக் ஏ.ஐ. பிரபல சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்துடன் இணைக்கப்பட்டு கிரோக் ஏ.ஐ. செயல்படுகிறது. எக்ஸ் தள பயனர்கள் சிலர் கிரோக் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படங்களை சட்டவிரோதமாக ஆபாசமாக மாற்றி வருகின்றனர்.
மேலும் அவற்றை எக்ஸ் தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வரவே அது வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் எக்ஸ் தளம் கிரோக் ஏ.ஐ.யை பயன்படுத்தி பெண்களின் ஆபாச படங்கள், பாலியல் ரீதியான படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை உருவாக்கியவர்களின் கணக்குகளை தெரிவு செய்து அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு 72 மணிநேரம் கெடு விதிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இது தொடர்பாக எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குரோக் ஏஐ செயலியை பயன்படுத்துபவர்கள் சட்டவிரோத தகவல்கள் மற்றும் படங்களை பதிவேற்றம் செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். சட்டவிரோத தகவல்கள், படங்கள், வீடியோக்களை பதிவேற்றும் செய்பவர்களின் கணக்குகளுக்கு நிரந்தரமாக தடை விதிக்கப்படும்” என்று எச்சரித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜப்பானின் பெயரை மாற்ற யோகி சென்றிருக்கிறார்: அகிலேஷ் யாதவ் கிண்டல்!
வியாழன் 26, பிப்ரவரி 2026 5:35:28 PM (IST)

நீதித்துறையில் ஊழல் குறித்த சர்ச்சை பாடம்: உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்; மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி!
வியாழன் 26, பிப்ரவரி 2026 4:52:28 PM (IST)

இது இந்தியா, வடகொரியா அல்ல: பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு ராகுல் காந்தி பதிலடி!
வியாழன் 26, பிப்ரவரி 2026 4:45:11 PM (IST)

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பேர் பின் தொடரும் உலகத் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி
வியாழன் 26, பிப்ரவரி 2026 12:03:36 PM (IST)

உலக அரிசி உற்பத்தியில் இந்தியா முதலிடம்: மத்திய அமைச்சர் பெருமிதம்
புதன் 25, பிப்ரவரி 2026 4:59:37 PM (IST)

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள்: பிரதமர் மோடி புகழஞ்சலி!
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 12:24:11 PM (IST)

