» சினிமா » செய்திகள்

டாக்ஸிக் டீஸருக்கு எதிராக மகளிர் ஆணையத்தில் புகார்

வியாழன் 15, ஜனவரி 2026 8:03:51 AM (IST)

டாக்ஸிக் படத்தின் டீஸரில் உள்ள ஆபாசமான காட்சிகள் உள்ளதாக ஆம் ஆத்மி மகளிர் அமைப்பினர் மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடித்துள்ள படம், ‘த டாக்ஸிக்’. ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. மார்ச் 19-ல் ரிலீஸாகும் இப்படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த், தாரா சுதாரியா உள்பட பலர் நடித்துள்ளனர்.

நடிகர் யாஷின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 8-ம் தேதி இதன் டீஸர், வெளியானது. அதில் ஆபாசமான காட்சிகள் இருப்பதாக அதன் இயக்குநர் கீது மோகன்தாஸுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், கர்நாடக மாநில ஆம் ஆத்மி கட்சியின் மகளிர் அமைப்பினர் இந்த டீஸருக்கு எதிராக மாநில மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.

அதில், "டாக்ஸிக் படத்தின் டீஸரில் உள்ள ஆபாசமான மற்றும் வெளிப்படையான காட்சிகள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் சமூக நலனுக்குத் தீங்கு விளைவிப்பதாக இருக்கின்றன. வயது குறித்த எந்த எச்சரிக்கையும் இன்றி வெளியிடப்பட்டுள்ள இந்த டீஸர் பெண்களின் கண்ணியத்தை கெடுக்கிறது; கன்னட கலாச்சாரத்தை அவமதிப்பதாக உள்ளது.

சமூகத்துக்கு எதிரான, குறிப்பாக சிறார்களுக்குப் பாதகத்தை ஏற்படுத்தும் அந்த டீஸருக்கு தடை விதிக்கவும் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கவும் மாநில அரசிடம் ஆணையம் கோரிக்கை வைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory