» சினிமா » செய்திகள்
ரிஷப் ஷெட்டி நடிக்கும் ஜெய் ஹனுமான்: ஹம்பியில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 12:41:15 PM (IST)

இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், 'காந்தாரா' புகழ் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடிக்கும் ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முறைப்படி பூஜையுடன் தொடங்கியது.
இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான 'ஹனுமான்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தேஜா சஜ்ஜா, அமிர்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார், வினய் ராய் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம், குறைந்த செலவில் எடுக்கப்பட்டு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் உலகளவில் சாதனை படைத்தது.
'ஹனுமான்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் அடுத்த பாகமாக 'ஜெய் ஹனுமான்' படத்தை பிரசாந்த் வர்மா உருவாக்கி வருகிறார். இதில் ஹனுமான் கதாபாத்திரத்தில் நடிக்க ரிஷப் ஷெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இத்திரைப்படத்தை டி-சீரிஸ் (T-Series) நிறுவனம் வழங்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புப் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. ஹனுமான் பிறந்த புனிதத் தலமாகக் கருதப்படும் கர்நாடக மாநிலம், விஜயநகரம் மாவட்டத்திலுள்ள ஹம்பி - அஞ்சனாத்ரி பெட்டா மலைப்பகுதியில் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது. டி-சீரிஸ் நிறுவனத் தலைவர் பூஷன் குமார் 'கிளாப்' அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.
ஆன்மீகமும் நவீனத் தொழில்நுட்பமும் கலந்த 'பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸ்' (PVCU) வரிசையில் உருவாகும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாஸ்ட்ரோ இளையராஜாவுடன் மாரி செல்வராஜ் புதிய கூட்டணி?
திங்கள் 25, மே 2026 5:04:55 PM (IST)

பிரேம்குமார் - பகத் பாசில் இணையும் புதிய த்ரில்லர் படம்: பூஜையுடன் தொடக்கம்!
வெள்ளி 22, மே 2026 4:51:58 PM (IST)

ஜெயிலர் 2 ரிலீஸ் தேதியை மாற்றிய சன் பிக்சர்ஸ்!
வியாழன் 21, மே 2026 5:12:31 PM (IST)

கருப்பு படத்தில் சர்ச்சை காட்சி: இளையராஜாவிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தது படக்குழு!
செவ்வாய் 19, மே 2026 4:00:36 PM (IST)

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் ஆற்றில் குதித்து தற்கொலை! - திரையுலகினர் அதிர்ச்சி!
திங்கள் 18, மே 2026 10:31:06 AM (IST)

முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த கமல்ஹாசன்: 6 முக்கியக் கோரிக்கைகளுடன் ஆலோசனை!
சனி 16, மே 2026 5:37:31 PM (IST)

