» சினிமா » செய்திகள்
ஜெயிலர் 2 முதல் பாகத்தை விட மாஸாக இருக்கும்: சுராஜ் வெஞ்சரமுடு நெகிழ்ச்சி
செவ்வாய் 3, மார்ச் 2026 12:40:27 PM (IST)
ஜெயிலர் 2’ திரைப்படம் முதல் பாகத்தை விட இன்னும் பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்று சுராஜ் வெஞ்சரமுடு கூறியுள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான சுராஜ் வெஞ்சரமுடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.தற்போது ‘யூத்’ படத்தில் கென் கருணாஸுக்கு அப்பாவாக நடித்துள்ள சுராஜ், அந்தப் படத்தின் விளம்பரத்திற்காக அளித்த பேட்டியில் 'ஜெயிலர் 2' மற்றும் ரஜினியுடன் நடித்த அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்துள்ளார்.
அப்பேட்டியில் அவர் கூறியதாவது: "‘ஜெயிலர் 2’ திரைப்படம் மிகவும் அற்புதமாக உருவாகியுள்ளது. முதல் பாகத்தோடு ஒப்பிடும்போது, இரண்டாம் பாகம் இன்னும் பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் இருக்கும். ரஜினி சாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. ஒவ்வொரு காட்சியிலும் அவர் நம்மை ஆச்சரியப்பட வைப்பார். உண்மையிலேயே அவர் ஒரு ‘மேஜிசியன்’ தான்.”
தமிழில் சரியான வாய்ப்புக்காகக் காத்திருந்ததாகத் தெரிவித்த சுராஜ், தற்போது தன் கைவசம் உள்ள படங்கள் குறித்துப் பேசுகையில்: "விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. அதைத் தொடர்ந்து இப்போது ‘யூத்’, ‘கரா’ மற்றும் ‘ஜெயிலர் 2’ ஆகிய படங்களில் எனது நடிப்புப் பணிகளை நிறைவு செய்துள்ளேன்,” எனத் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாஸ்ட்ரோ இளையராஜாவுடன் மாரி செல்வராஜ் புதிய கூட்டணி?
திங்கள் 25, மே 2026 5:04:55 PM (IST)

பிரேம்குமார் - பகத் பாசில் இணையும் புதிய த்ரில்லர் படம்: பூஜையுடன் தொடக்கம்!
வெள்ளி 22, மே 2026 4:51:58 PM (IST)

ஜெயிலர் 2 ரிலீஸ் தேதியை மாற்றிய சன் பிக்சர்ஸ்!
வியாழன் 21, மே 2026 5:12:31 PM (IST)

கருப்பு படத்தில் சர்ச்சை காட்சி: இளையராஜாவிடம் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தது படக்குழு!
செவ்வாய் 19, மே 2026 4:00:36 PM (IST)

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் ஆற்றில் குதித்து தற்கொலை! - திரையுலகினர் அதிர்ச்சி!
திங்கள் 18, மே 2026 10:31:06 AM (IST)

முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த கமல்ஹாசன்: 6 முக்கியக் கோரிக்கைகளுடன் ஆலோசனை!
சனி 16, மே 2026 5:37:31 PM (IST)

