» சினிமா » செய்திகள்

இந்தி நகைச்சுவை நடிகர் அஸ்ரானி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

புதன் 22, அக்டோபர் 2025 11:38:44 AM (IST)



பிரபல இந்தி நகைச்சுவை நடிகர் கோவர்தன் அஸ்ரானி (84), உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் பாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

50 ஆண்டுகளுக்கும் மேலான தனது திரைப்பயணத்தில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அஸ்ரானி, ஹிந்தி திரைப்படங்களில் தான் ஏற்றுநடித்த சிறந்த நகைச்சுவைப் பாத்திரங்களுக்காக பிரபலமானவர். ‘ஷோலே’ திரைப்படத்தில் சர்வாதிகார சிறை அதிகாரியாக நடித்து, பரவலாக ரசிகர்களைக் கவர்ந்தவர் அஸ்ரானி.

‘ஷோலே’ தவிர, ‘ஆஜ் கீ தாஜா கபர்’, ‘சோட்டி ஸி பாத்’, ‘அபிமான்’, ‘ரஃபூ சக்கர்’, ‘பாலி கா பதூ’, உள்ளிட்ட பல படங்களில் அவரது நகைச்சுவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

வயது முதிர்வு காரணமாக திரைத்துறையிலிருந்து விலகியிருந்த அஸ்ரானி, சுவாசம் தொடர்பான பிரச்னையால் மும்பை ஜுஹ_வில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அவர் காலமானார்.

அஸ்ரானியின் விருப்பத்தின்படி, அவரது மறைவு குறித்த தகவல் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை என்று அவரது மேலாளர் தெரிவித்தார். அஸ்ரானியின் இறுதிச் சடங்குகள் திங்கள்கிழமை மாலை சாண்டா க்ரூஸ் மயானத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றன.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமிதாப் பச்சன், அனுபம் கெர், அக்ஷய் குமார் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பலரும் அஸ்ரானியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்

வியாழன் 23, அக்டோபர் 2025 5:46:39 PM (IST)


Sponsored Ads



Thoothukudi Business Directory