» சினிமா » செய்திகள்

திருவண்ணாமலை மலை மீது தடையை மீறி சென்ற நடிகை: வனத்துறை விசாரணை!

வியாழன் 29, ஜனவரி 2026 11:16:22 AM (IST)


திருவண்ணாமலையில், தடையை மீறி மலை மீது சின்னத்திரை நடிகை அர்ச்சனா ஏறியது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் உள்ள மலை மீது செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தீபத் திருவிழாவின் போதும் பக்தர்கள் மலை ஏறுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், தீபம் நிறைவடைந்த பின்னர் அனுமதியின்றி மலைமீது சென்ற பெரம்பலூரைச் சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார். மேலும், மலைமீது தடையை மீறி செல்பவர்களை வனத்துறையினர் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் சின்னத்திரை நடிகை அர்ச்சனா, அண்ணாமலையார் தீபமலை மீது தடையை மீறி ஏறிச்சென்று அங்கு புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து பதிவு செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி அதில், பொதுமக்களை மலை ஏறுவதை ஊக்குவிக்கும் வகையில் பதிவும் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த பதிவு வைரலாகி வருவதால் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், மலை மீது சின்னத்திரை நடிகை அர்ச்சனா மட்டும் தனியாக சென்றிருக்க வாய்ப்பில்லை என்பதால், அவருக்கு உதவியது யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory